விவசாயிகள் மானியம் பெற துங்காவியில் இன்று சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் மானியம் பெற துங்காவியில் இன்று சிறப்பு முகாம்

Added : செப் 16, 2021
Share
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், சிறு, குறு விவசாயி சான்று மற்றும் 100 சதவீதம் மானியம் பெற துங்காவியில், இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:மத்திய, மாநில அரசுகள், நுண்ணீர் பாசனத்திற்கு பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், சிறு, குறு விவசாயி சான்று மற்றும் 100 சதவீதம் மானியம் பெற துங்காவியில், இன்று சிறப்பு முகாம் நடக்கிறது.மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:மத்திய, மாநில அரசுகள், நுண்ணீர் பாசனத்திற்கு பல்வேறு மானியத்திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியம் வழங்குகிறது.இந்த பாசனம் அமைக்க விரும்பும், ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்றிதழ் விரைந்து வழங்க, கிராம அளவில் சிறப்பு முகாம் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி, இன்று (17ம் தேதி) துங்காவி கிராம நிர்வாக அலுவலகத்தில், இந்த முகாம் நடக்கிறது. காலை, 10:00 மணி முதல், மதியம் 3 :00 மணி வரை நடக்கும் முகாமில், சிறு குறு விவசாயி சான்றிதழ் வழங்க கோரும் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது.இதனைத்தொடர்ந்து, ஆவணங்களை ஆய்வு செய்த பின்பு, வருவாய்த்துறையினர் வாயிலாக விரைந்து இந்த சான்றிதழ் வழங்கப்படும்.முகாம் நடக்கும் தினத்திலேயே, விவசாயிகள் விரும்பும், அரசு அனுமதி பெற்று, நுண்ணீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்கள் மற்றும் தோட்டக்கலைத்துறையினரால் வயல் ஆய்வு செய்யப்பட்டு, நுண்ணீர் பாசனம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.கூடுதல் தகவல்களுக்கு, உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் தாமோதரன்-96598 38787 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X