பொது செய்தி

தமிழ்நாடு

1 கோடி பீமா மூங்கில் ஓராண்டில் நட இலக்கு

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் ஓராண்டுக்குள், 1 கோடி பீமா மூங்கில் மரங்களை நட இலக்கு நிர்ணயித்துஉள்ளதாக, 'ஓ2 - 365' அமைப்பினர் தெரிவித்தனர்.அந்த அமைப்பைச் சேர்ந்த உமாநாத் உள்ளிட்டோர் அளித்த பேட்டி: இன்று ஓசோன் தினம். பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தில் காற்று மாசுபாட்டால் ஓட்டை விழுகிறது. இதனால் பூமி அதிக வெப்பமடைகிறது. இதைத் தவிர்க்க,

சென்னை:தமிழகத்தில் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் ஓராண்டுக்குள், 1 கோடி பீமா மூங்கில் மரங்களை நட இலக்கு நிர்ணயித்துஉள்ளதாக, 'ஓ2 - 365' அமைப்பினர் தெரிவித்தனர்.

அந்த அமைப்பைச் சேர்ந்த உமாநாத் உள்ளிட்டோர் அளித்த பேட்டி: இன்று ஓசோன் தினம். பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் படலத்தில் காற்று மாசுபாட்டால் ஓட்டை விழுகிறது. இதனால் பூமி அதிக வெப்பமடைகிறது. இதைத் தவிர்க்க, காற்று மாசை குறைப்பது அவசியம்.காற்று மாசைக் குறைக்கவும், நல்ல காற்றை பெருக்கவும் மரம் நடுவது தான் சிறந்த வழி.

எனவே ஓராண்டுக்குள் 1 கோடி பீமா மூங்கில் மரங்களை நட இலக்கு நிர்ணயித்து உள்ளோம். மற்ற மரங்களை விட பீமா மூங்கில் 20 மடங்கு கார்பன் - டை - ஆக்சைடை கிரகித்து, ஆக்சிஜனை வெளியிடும் திறன் பெற்றது. இரண்டாண்டுகளுக்கு பின், தினமும் 1.5 அடி உயரம் வளரும் திறன் பெற்றது.

இதில் முள் இருக்காது; புதர் போல் வளராது. இதை மொட்டை மாடி, காம்பவுண்ட் எல்லைகள் உள்ளிட்ட இடங்களில் வளர்க்கலாம். இந்த இலக்கில் இணைய விரும்புவோர், www.pasumai4u.com என்ற இணையதளத்தில் விபரம் அறியலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X