உள்ளாட்சி தேர்தலில் கமல் கட்சியும் தனித்து போட்டியிட முடிவு

Updated : செப் 18, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : பா.ம.க., - தே.மு.தி.க.,வை தொடர்ந்து, கமலின் மக்கள் நீதி மய்யமும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.தமிழகத்தில், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6, 9ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்க உள்ளது. வேட்பு மனுத்தாக்கல், நேற்று முன்தினம் துவங்கியது. களத்தில்
உள்ளாட்சி தேர்தல் கமல் கட்சி, தனித்து போட்டி

சென்னை : பா.ம.க., - தே.மு.தி.க.,வை தொடர்ந்து, கமலின் மக்கள் நீதி மய்யமும், உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில், செங்கல் பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6, 9ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்க உள்ளது. வேட்பு மனுத்தாக்கல், நேற்று முன்தினம் துவங்கியது.


களத்தில் சந்திப்போம்இத்தேர்தலில், பா.ம.க., - தே.மு.தி.க., - நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. அதேபோல், கமலின் மக்கள் நீதி மய்யமும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.இது குறித்து, கட்சியினருக்கு கமல் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது. நம் முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலு சேர்க்க, நானும் உங்கள் பகுதிக்கு வருகிறேன்.மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விரும்புவோர், அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலகம் மற்றும் மாநிலத் தலைமை அலுவலகத்தில், நேரடியாக விருப்ப மனுக்களை பெறலாம். மேலும், https://maiam.com/application-form.php என்ற இணைப்பை பயன்படுத்தி, 'ஆன்லைனிலும்' விருப்ப மனு அளிக்கலாம். இதில், ஏதேனும் உதவி தேவைப்பட்டால், மாவட்ட, மாநில தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம். களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கூட்டணி முறிந்ததுகட்சி நிர்வாகிகள் கூறியதாவது:சட்டசபை தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி அப்போதே முடிந்து விட்டது. சட்டசபை தேர்தலில், கிராமப்புறங்களில் சரிந்த கட்சி கட்டமைப்பை, இத்தேர்தல் வழியாக சரிசெய்ய வேண்டும் என, கமல் உத்தரவிட்டுள்ளார்.மொத்தம் 1,521 வேட்பாளர்கள் களமிறக்கப்பட உள்ளனர். தற்போது, வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வரும் கமல், செப்., 25க்கு பின் பிரசாரம் செய்வார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Mumbai,இந்தியா
17-செப்-202122:11:28 IST Report Abuse
Venkat மீண்டும் ஒருமுறை மண்ணைக்கவ்வ... வாழ்த்துக்கள் பிக்-பாஸ்...
Rate this:
Cancel
Constant Gardener - Dallas,யூ.எஸ்.ஏ
17-செப்-202121:18:35 IST Report Abuse
Constant Gardener நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
17-செப்-202121:10:02 IST Report Abuse
srinivasan Hassan Bai has acted as Taliban in the movie. He lot of tb fans. He can contest there also. Two Sikhs served as MPs there. Hassan Bai has acted as silkh too
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X