பொது செய்தி

தமிழ்நாடு

180 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: சீர் வரிசைப்பொருட்கள் வினியோகம்

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மடத்துக்குளம் அருகே, நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்,80 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் வழங்கும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் போஷன் அபியான் குழுமம் சார்பாக, கழுகரை மற்றும் கணியூரில் சமுதாய வளைகாப்பு நடந்தது.மடத்துக்குளம் தாலுகாவின் பல பகுதிகளிலிருந்து, 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள்பங்கேற்றனர்.இதில்,
 180 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: சீர் வரிசைப்பொருட்கள் வினியோகம்

மடத்துக்குளம் அருகே, நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில்,80 கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியம் வழங்கும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் போஷன் அபியான் குழுமம் சார்பாக, கழுகரை மற்றும் கணியூரில் சமுதாய வளைகாப்பு நடந்தது.மடத்துக்குளம் தாலுகாவின் பல பகுதிகளிலிருந்து, 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள்பங்கேற்றனர்.

இதில், ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு, கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.ஊட்டச்சத்தின் அவசியம் குறித்த, நாடகம் நடத்தப்பட்டது. பல்வேறு பழங்கள், ஆரோக்கியமான உணவுகள்,சத்துக்களை பெற உதவும் உலர் பழங்கள், காய்கறிகள், கீரைகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.நிகழ்ச்சியில், கர்ப்பிணிகளுக்கு தேவையான, ஊட்டச்சத்து வழங்கக்கூடிய பழங்கள் மற்றும் சத்துமிக்க இணை உணவுகள் வழங்கப்பட்டன.இதில் வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வீணா, வட்டார ஒருங்கிணைப்பாளர் கவுதமன், வட்டார திட்ட உதவியாளர் அனுசுயாதேவி மற்றும் இந்த திட்டப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகே, சமுதாயக்கூடத்தில் நேற்று, சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி, சீர் வரிசைகள் வழங்கப்பட்டது.விழாவுக்கு, எம்.எல்.ஏ., தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராஜன், நகர தி.மு.க., செயலாளர் கனகராஜ், ஒன்றிய செயலாளர் முகமது யாசின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு, வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, தட்டுகளில் சேலை, ஜாக்கெட், பழங்கள், வளையல், மஞ்சள் குங்குமம், பூ, மஞ்சள் கயிறு உள்ளிட்ட சீர் பொருள்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், ஊட்டச்சத்து பணியாளர்கள், உதவியாளர்கள் கர்ப்பிணிகளின் உறவினர்கள் பங்கேற்றனர்.- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
17-செப்-202106:43:22 IST Report Abuse
P Sundaramurthy உழைப்பின் பெருமையை உணர்த்துங்கள். சமுதாய உயர்வை அது கொண்டுவந்துவிடும் . இலவசங்கள், ஒதுக்கீடுகள் "நானும் ரௌடியைத்தான் " என்று வாகன கண்ணாடிகளை உடைக்கமட்டுமே பயன்படும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X