பொது செய்தி

தமிழ்நாடு

இறப்பு சான்றில் குளறுபடி? கலெக்டர்களை அணுகலாம்!

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை:'மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட இறப்பின் காரணம் திருப்தி அளிக்காவிட்டால், மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து, அதிகாரப்பூர்வ ஆவணப் படிவம் பெறலாம்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் - 1969ன்படி, ஒரு நபர் கடைசியாக நோயுற்று, எந்த

சென்னை:'மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட இறப்பின் காரணம் திருப்தி அளிக்காவிட்டால், மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து, அதிகாரப்பூர்வ ஆவணப் படிவம் பெறலாம்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் - 1969ன்படி, ஒரு நபர் கடைசியாக நோயுற்று, எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோ, அவரது இறப்பிற்குப் பின், அவை தான் இறப்பு சான்றிதழில் பதிவு செய்யப்படும்.கொரோனா இறப்பு என்றால், அதற்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாவட்ட அளவில் குழு அமைத்து, கொரோனா இறப்பு குறித்து பெறப்படும் மனுக்களை ஆய்வு செய்து, அதிகாரப்பூர்வ ஆவணப்படிவம் வழங்க, வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.எனவே, இறப்பு தொடர்பான மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட காரணம் திருப்தி அளிக்காவிட்டால், மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு, கொரோனா இறப்புக்கான ஆவணப் படிவம் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X