அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஜகா' வாங்கும் நிர்வாகிகள் தே.மு.தி.க., செயலர் உருக்கம்

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல், 'ஜகா' வாங்கி வரும் தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்து மாவட்டச் செயலர் பேசிய ஆடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தல் அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க., உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தே.மு.தி.க., தற்போது தனித்து

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல், 'ஜகா' வாங்கி வரும் தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்து மாவட்டச் செயலர் பேசிய ஆடியோ, 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தல் அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க., உடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தே.மு.தி.க., தற்போது தனித்து போட்டிஇடுகிறது. இதனால், கட்சி நிர்வாகிகள் பலரும் போட்டியிட தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., செயலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள ஆடியோ:உங்களுடைய மன கஷ்டமும், பண கஷ்டமும் எனக்கு தெரியும். நமக்கு வேறு வழியில்லை. உள்ளாட்சித் தேர்தலில் நாம் நின்று தான் ஆகணும். அனைத்து நிர்வாகிகளின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன். யாரால் முடியுமோ, குறைந்தபட்ச செலவு செய்தாவது தேர்தலில் நிற்க வேண்டும்.

சூழ்நிலை சரியில்லை. இல்லையென்றால் என்னால் முடிஞ்ச உதவி செய்வேன். மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் நாம் போட்டியிட வேண்டும். அதற்கு நீங்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு உருக்கமாக பேசியுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
19-செப்-202111:29:46 IST Report Abuse
 Muruga Vel கட்சி டிபாசிட்டாவது கட்ட முன்வந்தா சிலர் போட்டியிட முன்வருவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X