'மாஜி' அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் 'ரெய்டு': 654 சதவீத சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கை

Updated : செப் 17, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (13)
Advertisement
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அ.தி.மு.க. 'மாஜி' அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான சொகுசு பங்களா, நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், கல்லுாரி உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் வீரமணி 654 சதவீத சொத்துக்களை சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டியை
மாஜிஅமைச்சர், வீரமணி,  ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அ.தி.மு.க. 'மாஜி' அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான சொகுசு பங்களா, நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், கல்லுாரி உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் வீரமணி 654 சதவீத சொத்துக்களை சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டியை சேர்ந்தவர் வீரமணி 57. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை சின்னராசு ஜோலார்பேட்டையில் 'கே.கே.சின்னராசு அண்ட் சன்ஸ்' என்ற பெயரில் 'பீடி' கம்பெனி நடத்தி வந்தார்.தந்தையின் மறைவுக்கு பின் பீடி கம்பெனியை வீரமணி கவனித்து வந்தார். 'அகல்யா டிரான்ஸ்போர்ட்' என்ற நிறுவனத்தையும் நடத்தினார்.


latest tamil newsஇவருக்கு அழகிரி, காமராஜ் என இரு சகோதரர்கள் உள்ளனர். பத்மாசினி, மேகலை என இரண்டு மனைவியர் உண்டு. பத்மாசினி 2016ல் இறந்துவிட்டார். ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். பீடி கம்பெனி நடத்தி வந்த வீரமணிக்கு அரசியல் ஆர்வம் அதிகம். எம்.எல்.ஏ.வாக ஆகிவிட வேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருந்தது.அ.தி.மு.க.வில் விவசாய அணியில் உறுப்பினராக சேர்ந்த இவர் படிப்படியாக முன்னேறி 2011ல் ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆனார்.


latest tamil news


Advertisement


அதன் பின் 2013 - 16ல் பள்ளி கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார்.கூடுதலாக சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது.பின் 2016 - 21 வரை வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தார். 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை தழுவினார்.இவர் அமைச்சராக இருந்தபோதே வருமானத்திற்கு அதிகமாக பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக மாநில லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஆதாரங்களுடன் புகார்கள் தரப்பட்டன. வீரமணி 3000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருப்பதாக அவரது நெருங்கிய உறவினர் ஒருவரும் புகார் அளித்தார்.


latest tamil news


முதல் தகவல் அறிக்கை


இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மூன்று மாதங்களுக்கு மேல் ரகசிய விசாரணை நடத்தி சொத்து குவிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டினர்.மேலும் வீரமணி 2021 சட்டசபை தேர்தலில் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த அசையும் மற்றும் அசையா சொத்து விபர பட்டியல் குறித்த ஆவணங்களையும் சேகரித்தனர். அதன் அடிப்படையில் வீரமணி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் பெயரில் உள்ள சொத்து விபரங்களை ஆறு அறிக்கை வாயிலாக போலீசார் கணக்கீடு செய்தனர்.அப்போது 2016 ஏப்.1 முதல் 2021 மார்ச் 31 வரை வீரமணி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு உள்ளது.654 சதவீத சொத்துlatest tamil newsஎனவே அவரது பெயரில் உள்ள சொத்து விபரங்கள், நெருங்கிய உறவினர்கள் பெயரில் உள்ள வங்கி ரொக்க இருப்பு, நகைகள், முதலீடு, சேமிப்பு, சொகுசு பங்களா உள்ளிட்ட அனைத்து வகையான சொத்துகள் அனைத்தும் கணக்கிடப்பட்டன. அப்போது வீரமணி தன் பெயரிலும் நெருங்கிய உறவினர்கள் பெயரிலும் 28.78 கோடி ரூபாய்க்கு அதாவது 654 சதவீதம் சொத்து குவித்து இருப்பது தெரிய வந்தது.அதன் அடிப்படையில் வீரமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.35 இடங்களில் சோதனை


இதையடுத்து திருப்பத்துார், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை மாவட்டங்கள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. பண்ணை வீடுகள் சொகுசு பங்களாக்கள் கல்லுாரி நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் அலுவலகத்தில் நேற்று அதிகாலை 4:00 மணியில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.வீரமணி பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் அவரது நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் அரசியல் நேர்முக உதவியாளர்களாக இருந்தோரின் வீடு அலுவலகம் என மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது. திருப்பத்துாரில் முன்னாள் எம்.எல்.ஏ. ரமேஷ் வீட்டிலும் சோதனை நடந்தது.


latest tamil news


9 சொகுசு கார்


சோதனையில் 34.01 லட்சம் ரூபாய் ரொக்கம் 1.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணி டாலர்கள் ரோல்ஸ் ராய்ல்ஸ் உள்பட 9 சொகுசு கார்கள் 5 கணிணி 'ஹார்டு டிஸ்க்'குகள் சிக்கின.மேலும் பல கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் 5 கிலோ தங்கம் 47 கிராம் வைரம் 7 கிலோ வெள்ளி பொருட்கள் வங்கி கணக்கு புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் வீரமணி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 275 யூனிட் மணலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.சோதனை இரவு 9:00 மணிக்கு மேலும் நீட்டித்தது.


latest tamil news
கூட்டாளி வீட்டிற்கு 'சீல்'


வீரமணியின் நெருங்கிய கூட்டாளி ராம ஆஞ்சநேயலு வீடு சென்னை சூளைமேடு சிவானந்தா சாலையிலும் அலுவலகம் அண்ணா நகர் சாந்தி காலனியிலும் உள்ளது.இந்த இரு இடங்களில் ஆட்கள் இல்லாததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் 'சீல்' வைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
நமது நிருபர் குழு

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-202121:07:39 IST Report Abuse
Sriram V Whether anyone tell me Arappor iyakkam is political organization or affiliated to any party? Why they didn't file any case against DMK
Rate this:
Cancel
farmer -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202119:42:49 IST Report Abuse
farmer காசு பணம் துட்டு money money...எல்லாம் மக்கள் வரி பணம்
Rate this:
Cancel
Mithun - Bengaluru,ஓமன்
17-செப்-202119:17:57 IST Report Abuse
Mithun அதிமுகவில் இருந்தாலும் துரைமுருகனின் பினாமி என்பது ஊரறிந்த விடயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X