பொது செய்தி

இந்தியா

ஆறு மாதம் ஆட்டம் இருக்கும் அதுவரை உஷாரய்யா... உஷாரு:. கொரோனா வீரியம் இன்னும் குறையல

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்தியாவில் ஆறு மாதங்களில் கொரோனா வைரஸ் எண்டெமிக் நிலையை அடையும். பரவல் தொடர்ந்து இருக்கும் என தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் தான் பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்டெமிக் நோயாக மாறும் என உலக சுகாதார அமைப்பு
 ஆறு மாதம் ஆட்டம்,  அதுவரை உஷாரய்யா... உஷாரு:. கொரோனா வீரியம் , குறையல

இந்தியாவில் ஆறு மாதங்களில் கொரோனா வைரஸ் எண்டெமிக் நிலையை அடையும். பரவல் தொடர்ந்து இருக்கும் என தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் தெரிவித்துள்ளார். எனவே மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்தால் தான் பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.இந்தியாவில் கொரோனா வைரஸ் எண்டெமிக் நோயாக மாறும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் சுஜித் சிங் தெரிவித்துள்ளதாவது:உருமாற்றம் அடைந்த புதிய கோவிட் டெல்டா வைரசால் மட்டும் 3வது அலையை உருவாக்கிட முடியாது. இந்த பெருந்தொற்று நம்முடைய பெரும்பாலான கணிப்புகளை பொய்யாக்கி உள்ளது.

இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களில் கொரோனா வைரஸ் எண்டெமிக் நிலையை அடையும். மக்கள் மத்தியில் பரவல் தொடர்ந்து இருக்க போகிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஆனால், சாதாரண காய்ச்சலை போன்று இதைக் கையாண்டுவிட முடியும்.கொரோனா வைரஸ் எண்டெமிக் நிலையை அடையும் என்றால், அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். நமது சுகாதார கட்டமைப்புக்கு கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும். கோவிட் வைரசுக்கு எதிரான மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக தடுப்பூசி திகழ்கிறது. நாட்டில் 75 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செயல்திறன் 70 சதவீதமாக இருந்தால், இந்தியாவில் சுமார் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. ஒரு டோஸ் 30 முதல் 31 சதவீத நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஒரு டோஸ் பெற்ற 30 கோடி மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


'பண்டிகை காலம் இது; கவனமாய் இருங்கள்'



'பண்டிகை காலம் துவங்கி விட்டதால் அடுத்து வரும் மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்' என மத்திய அரசு எச்சரித்துள்ளது.ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியதாவது:ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் திடீரென கூடுவது தொற்று பரவலை எளிதாக்கும். அடுத்து வரும் மாதங்களில் பண்டிகை காலம் துவங்குவதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும்.இதனால் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வது, தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது, பயணங்களை பாதுகாப்புடன் மேற்கொள்வது, பொறுப்புணர்வுடன் பண்டிகைகளை கொண்டாடுவது ஆகிய நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-செப்-202109:22:48 IST Report Abuse
J.Isaac ஆதார் இல்லாமல் தங்க இடம்இன்றி விலாசம் இன்றி வாழ்வாதாரம் இன்றி பிச்சை எடுத்து வாழும், குப்பை பொறுக்கி வாழும் கோடிகணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட வழி வகுக்கப்பட்டுள்ளதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X