தமிழ்நாடு

சொந்த வீடு 'கனவு' நிஜமாகுமா? மாவட்டம் முழுவதும் முகாம்கள்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட, கட்டப்பட உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளைப் பெறுவதற்கு, மாவட்டம் முழுவதும், விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் குவிகின்றன.சமீப காலமாக, பொதுமக்கள் பலர், குறைகேட்பு முகாம்களில், இலவச வீட்டு மனை மற்றும் குடியிருப்பு கேட்டு அதிகளவில் மனுக்களை அளித்து வருகின்றனர். 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை மாநில
சொந்த வீடு 'கனவு' நிஜமாகுமா? மாவட்டம் முழுவதும் முகாம்கள்

திருப்பூர்:நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட, கட்டப்பட உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளைப் பெறுவதற்கு, மாவட்டம் முழுவதும், விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் குவிகின்றன.சமீப காலமாக, பொதுமக்கள் பலர், குறைகேட்பு முகாம்களில், இலவச வீட்டு மனை மற்றும் குடியிருப்பு கேட்டு அதிகளவில் மனுக்களை அளித்து வருகின்றனர். 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை மாநில அரசு முன்னெடுத்துள்ளது.

குடியிருப்பு கேட்டு வரும் மனுக்களை உள்ளாட்சி அமைப்பு மூலம், பகுதிவாரியாக பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு (குடிசை மாற்று வாரியம்) அறிவுறுத்தப்பட்டது.நேற்று முதல் கட்டமாக திருப்பூரில் நான்கு மண்டலங்களில் உள்ள 8 மையங்களில் இதற்கான மனுக்கள் பெற சிறப்பு முகாம் நடந்தது. மண்டல உதவி கமிஷனர்கள் துவக்கி வைத்தனர். நுாற்றுக்கணக்கானோர், ஆர்வத்துடன் மனுக்களை அளித்தனர். மனுக்கள் குடிசை மாற்று வாரியத்துக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும்.
வரும் 21ம் தேதி இரண்டாம் கட்டமாக முகாம் நடைபெற உள்ள இடங்கள்:
முதல் மண்டலம்: மாஸ்கோ நகர், சுகாதார ஆய்வாளர் அலுவலகம். வார்டு பகுதிகள் - 12, 13.வேலம்பாளையம் மண்டல அலுவலகம். வார்டுகள் - 1, 6, 10, 11, 14, 15.2வது மண்டலம்: பிச்சம்பாளையம், பழைய மண்டல அலுவலகம். வார்டுகள் - 26, 27, 28 , 29.3வது மண்டலம்: முத்தணம்பாளையம் வரி வசூல் மையம். வார்டுகள் - 36, 37.தாராபுரம் ரோடு மேல்நிலைத் தொட்டி வளாகம், வார்டுகள் - 42, 43, 44, 45.4வது மண்டலம்:ஆண்டிபாளையம் மண்டல அலுவலகம். வார்டுகள் - 56, 59, 60.ராயபுரம் மேல்நிலைத் தொட்டி வளாகம். வார்டுகள் 46,47,48, 49, 50, 51.பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நாளை முகாம் நடக்கிறது.

அவிநாசி, பூண்டியில்1,588 பேர் விண்ணப்பம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை பெற அவிநாசி, பூண்டியில், 1,588 பேர் விண்ணப்பித்தனர்.அவிநாசி, போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 2, 10,11,12,13 மற்றும், 14 வார்டு மக்களிடம் இருந்து மனு பெறப்பட்டது. மொத்தம், 270 மனுக்கள் பெறப்பட்டன.தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொது மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற உதவினர். திருமுருகன்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த முகாமில், பேரூராட்சிக்கு உட்பட்ட, 4 முதல், 15 வார்டு வரையிலான மக்களிடம் இருந்து மனு பெறப்பட்டது. மொத்தம், 1,318 மனு பெறப்பட்டது.

வெள்ளகோவில்வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில், நேற்று 453 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் கூறினர். மீண்டும் விண்ணப்பம், 20 முதல் 24ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும்கிடைக்குமா?
பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விண்ணப்பங்களைத் தற்போது பெற்று வருகிறோம்; இவ்வளவு பேருக்கும் குடியிருப்புகளில் இடம் ஒதுக்குவது என்பது இயலாதது. இதில், தகுதியுள்ள நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும்; தகுதியுள்ளவர்கள் அதிகளவில் இருக்கும்போது, புதிதாக குடியிருப்புகளை கட்டிய பின்பே அவர்களுக்கு ஒதுக்க முடியும். மேலும் வீடுகளை ஒதுக்கும் முன், அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பயனாளிகள் வழங்க வேண்டியிருக்கும்'' என்றனர்.

பல்லடத்தில் நாளை முகாம்

நகராட்சி கமிஷனர் விநாயகம் அறிக்கை:நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. அவற்றில், வீடு ஒதுக்கீடு பெற விரும்பும் பயனாளிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 18ம் தேதி(நாளை) காலை 10:00 மணி முதல் நடைபெறும். பயனாளிகள், பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளுக்குள் குடியிருக்க வேண்டும். சொந்த வீடு, நிலம் இல்லாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் தொகை, 1.50 லட்சம் ரூபாயை பயனாளிகள், தங்கள் பங்களிப்பாக செலுத்த வேண்டும். குடும்பத்தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தக முன் பக்க நகல் மற்றும் குடும்பத்தலைவர் புகைப்படம் -2, கொண்டு வர வேண்டும்.சிறப்பு முகாமில் பங்கேற்க இயலாதவர்கள், செப்., 24 வரை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை வழங்கலாம்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202108:44:56 IST Report Abuse
அப்புசாமி இந்திய மக்களுக்கு மோடி ஐயா வூடு. தமிழக மக்களுக்கு ஸ்டாலின் ஐயா வூடு. ஒரு பெரிய வூடு. ஒரு சின்ன வூடு. ஸ்வீட் எடு கொண்டாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X