விண்வெளிக்கு முதல் முறையாக பொதுமக்கள் பயணித்து சாதனை

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021
Share
Advertisement
கேப் கெனவெரல் : அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் எலன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் முன் அனுபவம் இல்லாத நான்கு அமெரிக்கர்களை முதல் முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசாஸ் உள்ளிட்ட கோடீஸ்வர தொழிலதிபர்கள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை
 விண்வெளி, முதல் முறை, பொதுமக்கள், சாதனை


கேப் கெனவெரல் : அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் எலன் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் முன் அனுபவம் இல்லாத நான்கு அமெரிக்கர்களை முதல் முறையாக விண்வெளி சுற்றுலாவுக்கு வெற்றிகரமாக அனுப்பியது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன், 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசாஸ் உள்ளிட்ட கோடீஸ்வர தொழிலதிபர்கள் விண்வெளி சுற்றுலா திட்டத்தை சமீபத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தினர்.

இந்த வரிசையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன அதிபர் எலன் மஸ்க் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்த திட்டத்தின் கீழ் முன் அனுபவம் இல்லாத நான்கு அமெரிக்கர்களை விண்வெளி பயணத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேற்று அனுப்பி வைத்தது.அமெரிக்காவின் 'ஷிப்ட் 4 பேமன்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவர் ஜார்ட் ஐசக்மேன் தலைமையிலான நான்கு பேர் உடைய குழு விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளது. இவர்கள் பயணம் செய்த விண்கலத்துக்கு 'இன்ஸ்பிரேஷன் -- 4' என பெயரிடப்பட்டுள்ளது.
புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளி தளத்திலிருந்து நேற்று காலை 5:32 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'பால்கன் என் - 9' என்ற ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

ராக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் இரண்டாவது அடுக்கு தனியாகப் பிரிந்து வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப் பாதைக்குள் நுழைந்தது.'பூமியிலிருந்து 575 கி.மீ. உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றி வரும். மணிக்கு 27,300 கி.மீ. வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுதுமாக சுற்றிவரும்.
'மூன்று நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின் அட்லான்டிக் கடலில் பால்கன் ராக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது நாள் வரை அரசின் வாயிலாக பயிற்சி பெற்று அதிகாரப்பூர்வ பயணத்தை மட்டுமே விண்வெளி வீரர்கள் மேற்கொண்டு வந்தனர். இந்த நான்கு பேரும் விண்வெளிக்கு முதல் முறையாக

சுற்றுலா பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் என்ற சிறப்பை பெறுகின்றனர்.இந்த விண்வெளி சுற்றுலாவில் கோடீஸ்வரர் ஜார்ட் ஐசக்மேன் உடன் ஹேலே ஆர்சனாக்ஸ் 29, என்ற பெண்ணும் பயணம் செய்தார். எலும்புபுற்று நோயால் அவதிப்பட்டு வரும் இவருக்கு இடது செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் கிறிஸ் செம்ப்ரோஸ்கி 42, மற்றும் சியான் ப்ராக்டர் 51, ஆகியோரும் சென்றுள்ளனர்.


பூமிக்கு திரும்பும் சீன வீரர்கள்



சீனாவைச் சேர்ந்த மூன்று விண்வெளி வீரர்கள் கடந்த 90 நாட்களாக சர்வதேச சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தனர். அங்கு விண்வெளி நடை பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். விண்வெளி நிலையத்தில் இருந்து சீன அதிபர் ஷீ ஜிங்பிங் உடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாடினர்.விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் வசித்த சீன வீரர்கள் என்ற பெருமையை இவர்கள் பெறுகின்றனர். இந்நிலையில் மூன்று வீரர்களும் விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று காலை பூமிக்கு புறப்பட்டனர். இவர்கள் நாளை பூமியை வந்தடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X