பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லையில் ஜாதி மோதல் 2,000 போலீசார் குவிப்பு

Added : செப் 17, 2021
Share
Advertisement
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே, ஜாதி மோதலில் நடந்த கொலைகள் தொடர்பாக, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பதற்றம் நிலவுவதால், எட்டு கிராமங்களில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே வடுவூர்பட்டியில் செப்., 13 இரவு சங்கரசுப்பிரமணியன், 37, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.அவரது தலையை துண்டித்த கும்பல், 2013ல் கொலை செய்யப்பட்ட கொத்தன்குளம்

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே, ஜாதி மோதலில் நடந்த கொலைகள் தொடர்பாக, 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பதற்றம் நிலவுவதால், எட்டு கிராமங்களில் 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே வடுவூர்பட்டியில் செப்., 13 இரவு சங்கரசுப்பிரமணியன், 37, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.அவரது தலையை துண்டித்த கும்பல், 2013ல் கொலை செய்யப்பட்ட கொத்தன்குளம் மந்திரம் என்பவரின் சமாதியில் வீசிச் சென்றது.

மந்திரம் கொலைக்கு பழிக்கு பழியாக நடந்த கொலையில், நேற்று மந்திரத்தின் மகன் மகராஜா, 20, உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.சங்கரசுப்பிரமணியன் கொலைக்கு பழிக்கு பழியாக செப்., 15 காலை கோபாலசமுத்திரம் அருகே மாரியப்பன், 37, வெட்டிக்கொலை செய்யப்பட்டார்; அவரது தலையையும் துண்டித்து வீசினர். இந்த கொலை தொடர்பாக, நேற்று எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இரு சமூகங்களுக்கு இடையே நிலவும் ஜாதி மோதலால் முன்னீர்பள்ளம், கோபாலசமுத்திரம், பிரான்சேரி உள்ளிட்ட எட்டு கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., மணிவண்ணன் தலைமையில் போலீசார் நேற்று இரு தரப்பு கிராமங்களிலும் அமைதி கூட்டங்களை நடத்தினர். அங்கு 2,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தென்மண்டல ஐ.ஜி., அன்பு ஆய்வு செய்தார்.ஜாதி மோதல் கொலைகளை தொடர்ந்து, தனிப்பட்ட முன்பகையில் நேற்று நெல்லை, துாத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தலா ஒன்று வீதம், மூன்று கொலைகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X