எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

நீயா... நானா: தம்பதியர் இடையே மனக்கசப்பு: விவாகரத்து வழக்குகள் அதிகரிப்பு

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை; பரஸ்பரம் விட்டுக்கொடுத்து விட்டால், பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். குறிப்பாக, கணவன்-மனைவிக்கிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கட்டாயம் வேண்டும். இந்த மனப்பான்மை குறைந்து வருவதால், கோவை குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வது அதிகரித்து வருகிறது. இந்தாண்டு, ஆக., வரை, 4,400 வழக்குகள் நிலுவையில் உள்ளன.குடும்ப பிரச்னை தொடர்பான
தம்பதியர், மனக்கசப்பு, விவாகரத்து, வழக்குகள், அதிகரிப்பு

கோவை; பரஸ்பரம் விட்டுக்கொடுத்து விட்டால், பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். குறிப்பாக, கணவன்-மனைவிக்கிடையே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கட்டாயம் வேண்டும். இந்த மனப்பான்மை குறைந்து வருவதால், கோவை குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வது அதிகரித்து வருகிறது.

இந்தாண்டு, ஆக., வரை, 4,400 வழக்குகள் நிலுவையில் உள்ளன.குடும்ப பிரச்னை தொடர்பான வழக்குகளை விசாரிக்க, கோவையில், முதன்மை மற்றும் கூடுதல் குடும்ப நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. விவாகரத்து, கணவன் அல்லது மனைவியுடன் சேர்த்து வைக்க கோருதல், குழந்தைகள் பாதுகாப்பு கோருதல், ஜீவனாம்சம் உட்பட பல்வேறு நிவாரணம் கேட்டு, வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஆறு மாத காலத்திற்குள் விசாரணை முடித்து உத்தரவு பிறப்பிக்க குடும்ப நல சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாளுக்கு நாள் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இரண்டு குடும்ப நீதிமன்றங்களில், மாதம்தோறும் சராசரியாக 280-300 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. தீர்வு காணப்படும் வழக்குகள் பாதிக்கும் குறைவாக இருப்பதால் தேக்கம் அதிகரிக்கிறது.

கோவை குடும்ப நீதிமன்றத்தில், 2019ல், 4,000 வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த ஆகஸ்ட் வரை நிலுவை வழக்கு 4,400 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்தாண்டு விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்வது அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக, பல மாதங்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், வீடுகளில் முடங்கி கிடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில், கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட சின்ன சின்ன பிரச்னைகள், பெரிதாகி விவாகரத்து வரை சென்றுள்ளதாக, சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

விவாகரத்து கேட்டு, தினந்தோறும் கோர்ட் வாசலில் காத்து கிடப்பவர்களில், 25- 30 வயதுக்கு உட்பட்ட இளம் தம்பதிகளே அதிகம். திருமணமான சில மாதங்களில், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கேட்டு வழக்கு தாக்கல் செய்வதும் அதிகரித்துள்ளது. ஆண்களை விட, பெண்கள் தான் முதலில் கோர்ட்டுக்கு வருகின்றனர்.

தம்பதியர் மத்தியில், விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல், 'ஈகோ'வுடன் இருப்பதே விவகாரத்துக்கு முக்கியமான காரணம். இரண்டு நீதிமன்றங்களில், 2019ல், 2,146 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, 1,859 வழக்கிலும், 2020ல் 1,629 வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 829 வழக்கிலும் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆனால், இந்தாண்டு ஆக., வரை, அதாவது எட்டு மாதங்களில் மட்டும், 1,399 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 956 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன. இன்னும் நான்கு மாதங்களில், 1,200 வழக்குகள் வரை தாக்கல் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.


படித்தவர்களே அதிகம்!

இது குறித்து, கோவை வக்கீல் ஆர்.சண்முகம் கூறியதாவது:தற்போதைய கால கட்டத்தில், கூட்டு குடும்ப வாழ்க்கை முறை இல்லாமல் போய்விட்டது. கணவன்- மனைவிக்கு இடையே பிரச்னை வந்தால், அவற்றை பேசி தீர்த்து வைக்க பெரியவர்கள் உடன் இல்லை. சின்ன பிரச்னை ஏற்பட்டாலும், உடனே விவாகரத்து முடிவுக்கு வந்து விடுகின்றனர். விட்டுகொடுக்கும் மனப்பான்மை குறைந்து விட்டது. படித்தவர்களே அதிகளவில் விவாகரத்துக்கு முன்வருகின்றனர். அதிகம் படித்தால் மட்டும் போதாது; வாழ்வியல் கல்வியை கற்க வேண்டும். தம்பதியருக்கு மனக்கசப்பு ஏற்பட்டால், உடனே கோர்ட்டுக்கு செல்லாமல், மனநல ஆலோசகரை சந்தித்து, பிரச்னைக்கு தீர்வு காண முன் வர வேண்டும். இவ்வாறு, வக்கீல் சண்முகம் கூறினார்.
ஆண்டு - புதிய வழக்கு - தீர்வு
2019 - 2,146 - 1,859
2020 - 1,629 - 829
2021(ஆக.,) - 1,399 - 956

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
23-செப்-202116:08:39 IST Report Abuse
INDIAN Kumar உரையில் ரெண்டு கத்தி இருந்தா பிரச்சினை தான்
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
23-செப்-202115:38:49 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy பொருளாதாரம் அதிகம். அது குறைந்தால் விவகாரத்து அறவே இருக்காது.
Rate this:
Cancel
Kumar Thamizhlan - Chennai,இந்தியா
22-செப்-202114:45:32 IST Report Abuse
Kumar Thamizhlan தலாகிற்கும் விவாகாரத்திக்கும் என்ன வித்தியாசம்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X