பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: தீர்மானம் இருக்க கவலை ஏன்?

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (70)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:க.சிவஞானம், பெருமாள்புரம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், 'தீர்மானம்' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி, மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன. நாட்டு மக்களாகிய நாமும், அதன் சூட்சுமம் புரியாமல், பூரித்து மகிழ்கிறோம்.'குடி'காரன் ஒருவன், தினமும் மது
நீட், சட்டசபை, தீர்மானம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


க.சிவஞானம், பெருமாள்புரம், நெல்லையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள், 'தீர்மானம்' என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி, மக்களுக்கு வேடிக்கை காட்டுகின்றன. நாட்டு மக்களாகிய நாமும், அதன் சூட்சுமம் புரியாமல், பூரித்து மகிழ்கிறோம்.

'குடி'காரன் ஒருவன், தினமும் மது அருந்துவதால் வீட்டில் எப்போதும் சண்டையும், சச்சரவும் தான். இதற்கு முடிவு கட்ட, ஒரு நாள் தன் மனைவி-, குழந்தைகள் அனைவரையும் அழைத்து, 'நாளை முதல் குடிக்க மாட்டேன்; இது சத்தியம்' என தீர்மானம் போடுகிறான். இதனால், அவனது குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கிறது; ஆனந்தக் கூத்தாடுகிறது.அவன் போட்ட தீர்மானத்தால், 'டாஸ்மாக்' கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விடுமா அல்லது 'குடி'மகன்கள் அனைவரும், 'டேய், ஐயா தீர்மானம் போட்டுட்டார்டா... இனிமே நாமும் தண்ணியடிக்க கூடாதுடா' என திருந்தி விடுவரா?

இது தான்ங்க, தீர்மானம் என்பது! உங்கள் ஊரில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அமைச்சரிடம், நீங்கள் ஆர்வமாக கொடுக்கும் கோரிக்கைக்கு என்ன மரியாதை கிடைக்குமோ, அதே மரியாதை தான், அரசியல் கட்சிகள் போடும் தீர்மானத்திற்கும் கிடைக்கும். சில நாட்களுக்கு முன் தமிழக சட்டசபையில் 2021 ஜன., 10ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒரு தீர்மானம் போடப்பட்டது. மத்திய அரசு அமல்படுத்தி, அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கட்டுப்படுத்துமா... நிச்சயம் கட்டுப்படுத்தாது!


latest tamil news


சமீபத்தில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத்தாலேயே தடை விதிக்க முடியாது, விலக்கு அளிக்க இயலாது என தீர்ப்பளிக்கப்பட்ட நீட் தேர்வு விவகாரத்தில், தி.மு.க., அரசு வேடிக்கை காட்டுகிறது. எதிர்க்கட்சியாக இருந்தால், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து விடலாம்; விஷயம் சுலபமாக முடிந்து விடும். ஆளும் கட்சியாக இருப்பதால், தி.மு.க.,வினரால் வெளிநடப்பு செய்ய இயலாது; அதனால், 'தீர்மானம்' என, 'படம்' காட்டுகின்றனர்.

தேர்தலுக்கு முன் அளித்த நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக தேர்வு செய்து, அடுத்தடுத்து வரும் சட்டசபை கூட்ட தொடர்களில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், விஷயம் முடிந்தது. அதன் பின், நாக்கு மீது பல்லு போட்டு யாரும் ஒரு கேள்வி கேட்க முடியாது. அது தான் பதில் தெளிவாக இருக்கிறதே... 'தீர்மானம் போட்டு இருக்கிறோம்' என்று!

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadiyan - edho_ooru,அன்டார்டிகா
18-செப்-202102:13:45 IST Report Abuse
kadiyan appadiye naalai mudhal Corono virus veliyera vendum enru oru theermanam podigal. Deemkavirku payandhu odi vidum.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
18-செப்-202100:54:46 IST Report Abuse
s t rajan தற்கொலை நடப்பதால் NEET தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானம். தமிழக சட்டசபையில். +2 தேர்வில் தோல்வி. மனம் உடைந்து மாணவர் தற்கொலை. +2 தேர்வை தடை செய்யலாம். 10 th தேர்வு. தோல்வி அல்லது எதிர் பார்த்த மதிப்பெண் வர வில்லை. தற்கொலை. 10th தேர்வை தடை செய்யலாம். அரசியல் கட்சிகளில் முன்னேற முடியாமல் பலர் தற்கொலை. தான் சார்ந்த கட்சி தோல்வி அடைந்தாலோ, தன் கட்சி தலைவர்களை கைது செய்தாலோ தொண்டர்கள் தீக்குளித்து தற்கொலை. அரசியல் கட்சிகளை தடை செய்து விடலாம். TNPSC தேர்வில் தோல்வி. தற்கொலை. அந்த TNPSC தேர்வுகளை தடை செய்து விடலாம். சினிமா துறையில் பலர் தற்கொலை. சினிமா,OTT, TV serialகளை தடை செய்து விடலாம். சினிமாவே இல்லாத போது தியேட்டர்கள் எதற்கு? தடை செய்து விடலாம். வேலை கிடைக்காமல் பலர் தற்கொலை. வேலை வாய்ப்பையே தடை செய்து விடலாம். IIT, IIM தேர்வில் தோல்வி. தற்கொலை. அந்த படிப்புகளை தடை செய்து விடலாம். JEE entrance,Tancet, CAT,MAT, SAT நுழைவுத் தேர்வுகளில் தோல்வி. தற்கொலை. அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தடை செய்து விடலாம். எனஜினீயரிங் பட்ட படிப்பு தேர்வில் தோல்வி. தற்கொலை. அந்த பட்ட படிப்புகளை தடை செய்து விடலாம். திருமணம் நடக்காமல் ஏக்கம். தற்கொலை. திருமணங்களை தடை செய்து விடலாம். குழந்தை பெற முடியவில்லையே. தற்கொலை. குழந்தை பெறுவதையே தடை செய்து விடலாம். குடும்ப தகராறு. தற்கொலை. குடும்பங்களை தடை செய்து விடலாம். கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி. ரசிகர்கள் தற்கொலை. கிரிக்கெட்டை தடை செய்து விடலாம். வங்கி கடனை கட்ட முடியாமல் தற்கொலை. வங்கிகள் கடன் கொடுப்பதால்தானே கட்ட முடிவதில்லை. கடன் கொடுப்பதை தடை செய்து விடலாம். காதல் தோல்வி. தற்கொலை. காதலையே தடை செய்து விடலாம். போலிஸ் தற்கொலை. காவல் நிலையங்களை மூடி விடலாம். வக்கீல் டாக்டர் ஆடிட்டர் எதிர் பார்த்த முன்னேற்றம் இல்லை. தற்கொலை. அந்த தொழில்களையே தடை செய்து விடலாம். நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பால் பாதிப்படைந்த மனுதாரர் தற்கொலை. நீதி மன்றங்களை தடை செய்து விடலாம். NEET தேர்வு மட்டும் என்ன தவறு செய்தது? அதை மட்டும் தடை செய்ய?
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
17-செப்-202121:53:01 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் "முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரணை" இந்த களேபரத்துக்கு காரணம் என்ன ? நேர்மை மீது பற்றா ? கிடையாது நீட் தற்கொலை, மோசடி தேர்தல் வாக்குறுதி இதையெல்லாம் மக்கள் மறக்கவேண்டும் என்ற நோக்கம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X