பொது செய்தி

இந்தியா

விமானப்படை வீரர்கள் விழிப்புணர்வு பயணம்

Added : செப் 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி-விழிப்புணர்வு பயணமாக புதுச்சேரி வந்த விமானப் படை வீரர்களை கவர்னர் வரவேற்று, கலந்துரையாடினார். பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அதை கொண்டாடும் வகையில், இந்திய விமானப்படை வீரர்கள் 16 பேர், கமாண்டர்கள் நித்தின் உபாத்யா, சைலேந்திர சிங் தலைமையில், சைக்கிள் பேரணியாக புறப்பட்டனர்.கடந்த 10ம் தேதி தஞ்சாவூரில் இருந்து

புதுச்சேரி-விழிப்புணர்வு பயணமாக புதுச்சேரி வந்த விமானப் படை வீரர்களை கவர்னர் வரவேற்று, கலந்துரையாடினார். பாகிஸ்தான் உடன் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அதை கொண்டாடும் வகையில், இந்திய விமானப்படை வீரர்கள் 16 பேர், கமாண்டர்கள் நித்தின் உபாத்யா, சைலேந்திர சிங் தலைமையில், சைக்கிள் பேரணியாக புறப்பட்டனர்.கடந்த 10ம் தேதி தஞ்சாவூரில் இருந்து புறப்பட்ட பேரணி சிதம்பரம், கடலுார் வழியாக நேற்று புதுச்சேரி வந்தடைந்தது.அவர்களை கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை வரவேற்று கலந்துரையாடினார். பின்னர் மாமல்லபுரம் நோக்கி புறப்பட்ட பயணத்தை கவர்னர் துவக்கி வைத்தார்.பேரணியில் பங்கேற்ற விமானப்படை வீரர்கள் கூறுகையில், '1971ம் ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டு நிறைவு பெற்றது. இதை கொண்டாடும் வகையில் இந்திய விமானப்படை வீரர்கள் தஞ்சாவூரிலிருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் பேரணியாக சென்று மீண்டும் தஞ்சாவூர் செல்கின்றனர். மொத்தம் 700 கி.மீ. துாரம் பயணம் செல்ல உள்ளோம். தினமும் சராசரியாக 100 கி.மீ., பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றனர்.போதைப்பொருள் நடமாட்டம்கவர்னர் அறிக்கை கேட்புகவர்னர் தமிழிசை கூறுகையில், 'புதுச்சேரியில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை நிச்சயமாக அனுமதிக்க முடியாது. போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை எங்கிருந்து வருகிறது என உளவுத் துறையினரிடம் அறிக்கை கேட்டுள்ளேன்' என்றார்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X