உயர்மட்டக் குழு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உயர்மட்டக் குழு

Added : செப் 17, 2021
Share
ரூ. 150 கோடிக்கு மேலான திட்டங்களை கண்காணிக்க...பணியை விரைவாக முடிக்க அதிரடி நடவடிக்கை மத்திய அரசு புதுச்சேரி அரசுடன் இணைந்து பல திட்டங்களை அரசு துறைகளில் செயல்படுத்தி வருகிறது. அதில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் போன்றவை முக்கியமானவை.இந்த திட்டங்களுக்கு பெருவாரியான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது.புதிய குழுஇந்நிலையில்,

ரூ. 150 கோடிக்கு மேலான திட்டங்களை கண்காணிக்க...பணியை விரைவாக முடிக்க அதிரடி நடவடிக்கை மத்திய அரசு புதுச்சேரி அரசுடன் இணைந்து பல திட்டங்களை அரசு துறைகளில் செயல்படுத்தி வருகிறது. அதில் வேலைவாய்ப்பு உறுதி திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் போன்றவை முக்கியமானவை.இந்த திட்டங்களுக்கு பெருவாரியான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி வருகிறது.புதிய குழுஇந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் ரூ.150 கோடிக்கு மேல் மத்திய அரசு பங்களிப்புடன் துவங்க உள்ள திட்டங்களை கண்காணிக்க, தலைமைச்செயலர் அஸ்வனிகுமார் தலைமையில் உயர்மட்ட கமிட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஆலோசனைப்படி அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் வருவாய், மின்துறை, நகர மற்றும் கிராம அமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், உள்ளாட்சி, பொதுப்பணி ஆகிய துறைகளின் செயலர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர் .மேலும், மத்திய புள்ளிவிபர திட்ட அமலாக்க துறை பிரதிநிதி, மாநில அரசின் மத்திய திட்டங்களுக்கான பிரதிநிதி ஆகியோரும் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். திட்டத் துறை செயலர், இக்குழுவின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.காரணம் என்னசாதாரணமாக சிறிய தொகையில் மாநிலத்திற்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கினாலும் ஏகப்பட்ட தடைகள் வருகின்றன.குறிப்பாக, மத்திய அரசு திட்டம் எந்த திட்டத்தை அறிவித்தாலும் தொலைக்குநோக்கு பார்வை, சாதகம், பாதக அம்சங்களை ஆராயமால், கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் போக்கு சமீபத்தில் தலைதுாக்கி உள்ளது.அரசியல் கட்சிகளும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக, கூக்குரல் எழுப்பி, பிரச்னையை திசைமாற்றி விடுகின்றன.மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு எதிராக போராட்டம், வழக்கு என அடுத்தடுத்து பல தடைகளை ஏற்படுத்தி விடுகின்றனர். அதனால், திட்டம் துவங்குவதில் பெரும் கால தாமதம் நேர்கிறது.நெடுஞ்சாலை விரிவாக்கம் போன்ற பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஏற்படும் தடைகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை.எனவே, புதுச்சேரியில் இதுபோன்று பெரிய திட்டங்களை துவக்கும்போது ஏற்படும் தடை, கால தாமதம் ஆகியவற்றை தடுக்க, இந்த உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.குழுவின் பணிகாலாண்டிற்கு ஒருமுறை இந்த உயர் மட்டக்குழு ஒன்று கூடி, ஆலோசனை நடத்தும்.இக்குழு, மத்திய அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்.அத்துடன், புதிய திட்டத்தில் துறைகளுக்கு இடையிலான இடைவெளி, சட்டம் ஒழுங்கு, ஆக்கிரமிப்பு அகற்றம், உள்ளூர் குழுக்களின் போராட்டம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆராயும்.திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள பிரச்னைகளை களைந்து, பணியை விரைவுபடுத்தும்.தற்போதைய நிலைபுதுச்சேரி மாநிலத்தில் 150 கோடி ரூபாய்க்கு மேல் எந்த திட்டப் பணிகளும் தற்போது நடக்கவில்லை. புதுச்சேரி-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி 150 கோடி ரூபாய்க்கு மேல் தற்போது நடந்து வந்தாலும், தமிழக அரசின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.புதுச்சேரிக்கு புதிய சட்டசபையை ரூ.320 கோடியில் கட்ட திட்ட மதிப்பீடு தயாராகி வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தந்தால், அப்பணியை உயர்மட்ட கமிட்டி கண்காணிக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X