பொது செய்தி

இந்தியா

வேக வேகமா தடுப்பூசி!

Added : செப் 17, 2021
Share
Advertisement
வேக வேகமா தடுப்பூசி!கோல்டு சிட்டியில் மகாமாரி நோயால் இறந்தவங்க கணக்கு விபர உண்மையை காட்டல. தடுப்பூசி விபரத்தையாவது நேர்மையா கணக்கு காட்டனும்னு குத்தல் பேச்சு பரிகாசமா கேட்க முடியுது.இன்னும் மகாமாரி தொற்று முழுசாக ஒழியல. தினமும் தொடருது. நர்சிங் கல்லுாரியை மூடினது போல உ.பேட்டையில் ஒரு பள்ளியில் மாணவருக்கு பாசிடிவ் இருப்பது உறுதியானதால், நேற்று முதல் பள்ளியை ஒரு

வேக வேகமா தடுப்பூசி!கோல்டு சிட்டியில் மகாமாரி நோயால் இறந்தவங்க கணக்கு விபர உண்மையை காட்டல. தடுப்பூசி விபரத்தையாவது நேர்மையா கணக்கு காட்டனும்னு குத்தல் பேச்சு பரிகாசமா கேட்க முடியுது.இன்னும் மகாமாரி தொற்று முழுசாக ஒழியல. தினமும் தொடருது. நர்சிங் கல்லுாரியை மூடினது போல உ.பேட்டையில் ஒரு பள்ளியில் மாணவருக்கு பாசிடிவ் இருப்பது உறுதியானதால், நேற்று முதல் பள்ளியை ஒரு வாரம் மூட உத்தரவு போட்டுட்டாங்க.மெகா தடுப்பூசி முகாமை இன்று 35 வார்டுகளிலுமே நடத்த மாவட்ட கலெக்டர் உத்தரவு போட்டிருப்பதால் முனிசிபாலிடி, ஹெல்த், மெடிக்கல் டிபார்ட்மென்ட்காரங்க பரபரப்பா வேகத்தை காட்டுறாங்க.ஆறு மாதமாக தேடி வருகிறவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டவங்க, இப்போ வீடு வீடா போய் கூப்பிடுறாங்க; அக்கறை காட்டுறாங்க. தடுப்பூசி போடுறவங்களும் ஸ்பீடு காட்டுறாங்க. தடுப்பூசி வேலை இப்போ தான் சுறுசுறுப்பாகியுள்ளது.பள்ளிகள் ஆக்கிரமிப்பு!மைன்சை மூடிட்டாங்க. மைன்ஸ் கண்ட்ரோலில் உள்ள கல்வி நிறுவனங்களை சில தனியார் அமைப்புகள் சொந்தம் கொண்டாடி அபகரிக்கும் வேலையை நடத்தி வராங்க.தனியார் டிரஸ்ட்கள் பேரில் திருமண மண்டபங்களை கையகப்படுத்திக் கொண்டது போல, பள்ளிகளின் கட்டடங்களையும் ஆக்ரமிப்பு செய்து வராங்க. ஒவ்வொன்றும் பல லட்சங்களுக்கும் அதிகமாகும்.மைன்ஸ் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிகளை மாநில அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விபரம் தெரிந்தவங்க அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்காங்க. ஒரு சமுதாய அமைப்புக்காரங்க தர்ணா நடத்தி அரசின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்காங்க.முடங்கி கிடக்கும் திட்டப்பணி!ரெண்டு வருஷமா நகர வளர்ச்சி திட்டங்களுக்கும் தீராத வியாதி ஏற்பட்டது போல முடங்கி போய் இருக்குது. 60 ஆண்டுகளுக்கு முன் ஆ.பேட்டையில் நடைபாதை அமைச்சாங்க. அதுக்கப்புறம் நடைபாதையை தேட வேண்டி இருக்குது.இதுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருப்பதாக, நான்கு வருஷத்துக்கு முன்னாடி சொன்னாங்க. அந்த நிதியை மகாமாரி சாப்பிடுடிச்சா. இதை சீர்படுத்த இன்னும் 50 வருஷம் காத்திருக்கணுமா.மகாமாரி நோயை ஒழிக்க தடுப்பூசி வந்திருப்பது போல, நோய்வாய்பட்டுள்ள நகர வளர்ச்சி திட்ட வேலைகள் குணமாக்க, திட்டம் எப்போ வருமோ.மீண்டும் வீடு கட்டும் திட்டம்!ஆஷ்ரியா திட்ட குடியிருப்புகள் கட்டுவதற்கு பல கோடிகளை அரசு நிதி வழங்கியது. உ.பேட்டையில், ரா.பேட்டையில், ராஜர்ஸ் கேம்ப் அருகில் 300 வீடுகளை 25 வருஷத்துக்கு முன்னாடியே கட்டி முடிச்சாச்சு. அதை பயனாளிகளுக்கு ஒப்படைக்காததால் யாருமே குடியேறாததால், நாசமா போனது. சட்ட விரோத வேலைகளுக்கு யூஸ் பண்ணிக்கிட்டாங்க. பல கட்டடம் இடிந்து நொறுங்கியது. மஸ்கம் பகுதியில் கட்டப்பட்ட வீடுகள், தரைமட்டமாகி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போனது. அந்த அரசு இடத்தை பல பேரு பட்டா ஆக்கி பல லட்சங்களை ஏப்பமிட்டாங்க. மறுபடியும் அரசு வீடு கட்டும் திட்டத்தை துவங்குவதா சொல்றாங்க.கட்டப்படும் வீடுகளை பயனாளிகளுக்கு கொண்டுப்போய் சேர்த்தால் மட்டுமே, பயன் கொடுக்கும். இல்லையேல் பழையபடி திட்டமே வேஸ்ட் ஆகிடும்னு வீடில்லாத வங்க வருந்துறாங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X