பொது செய்தி

இந்தியா

சின்ன சின்னதாய்

Added : செப் 17, 2021
Share
Advertisement
தங்கவயலில் நாளை மின் தடை! தங்கவயலில் மின் பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், நாளை 18 ல் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.ஏ.ஆர்.டி.ஓ., அலுவலகம், நியூ ஓரியண்டல், என்றிஸ் 5விளக்கு பகுதி, மாரிகுப்பம், டி.ஏ.ஆர்., குடியிருப்பு, கில்பர்ட்ஸ், போலீஸ் எஸ்.பி., ஆபிஸ், சாம்பியன், தொட்ட உலகமதி, சின்னகான ஹள்ளி, சிக்க உலகமதி, சீனிவாசநகர், வைசன்ன ஹள்ளி, திம்பால்

தங்கவயலில் நாளை மின் தடை! தங்கவயலில் மின் பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால், நாளை 18 ல் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.ஏ.ஆர்.டி.ஓ., அலுவலகம், நியூ ஓரியண்டல், என்றிஸ் 5விளக்கு பகுதி, மாரிகுப்பம், டி.ஏ.ஆர்., குடியிருப்பு, கில்பர்ட்ஸ், போலீஸ் எஸ்.பி., ஆபிஸ், சாம்பியன், தொட்ட உலகமதி, சின்னகான ஹள்ளி, சிக்க உலகமதி, சீனிவாசநகர், வைசன்ன ஹள்ளி, திம்பால் திருமலஹள்ளி, சின்னக்கண்ணு நகர், விருபாட்சிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது என பெஸ்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.தமிழ் மூலம் கன்னடம் பயிற்சி!தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மூலம் கன்னடம் கற்கும் நுால்களை தமிழர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் புத்தகத்தை வெளியிட்டார். பேராசிரியர் கிருஷ்ண குமார், வக்கீல் மணிவண்ணன் பெற்றுக்கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை சத்தியபாமா நற்பணி இயக்க நிர்வாகிகள் கவுரி சங்கர், கமல் முனிசாமி, முரளி, ஜோஸ்வா, பவன், திருமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.ஜிம்கானா மைதானம் திறக்க தர்ணா!ஜிம்கானா மைதானம் எனும் அம்பேத்கர் ஸ்டேடியத்தை மூடி வைத்துள்ளனர். அதனை திறந்து விளையாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்; தங்கச் சுரங்க நிறுவனத்தின் ஆங்கிலப் பள்ளியை கர்நாடக அரசு ஏற்று நடத்த வேண்டும். தனியார் ஆக்ரமிப்பை தடுக்க வேண்டும்; சுரங்க குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தலித் ரக் ஷணா வேதிகே அமைப்பினர் தலைவர் அன்பரசன் தலைமையில், தங்கவயல் தாலுகா அலுவலகம் முன் நேற்று தர்ணா நடந்தது. ஜோயல், அன்பு பிரபுதாஸ், அஜய், சுனில் குமார், தினேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆபத்தில் மின் கம்பம்!பங்கார்பேட்டை விவேகானந்த நகரில் சிமென்ட் மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. எந்த நேரத்திலும் விழும் ஆபத்தில் உள்ளது. உயர் மின் அழுத்தம் கொண்ட மின் கம்பத்தை விரைந்து மாற்றுமாறு குடியிருப்போர் நல சங்கத்தினர் கோரினர். மின்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.25 ஆண்டு சிறை தண்டனை!தங்கவயல் மல்லம்பள்ளி கிராமத்தில் 2019 ஏப்ரல் 8 ல் சிறுமியை, அதே கிராமத்தின் ஆசிரியர் நாகேஷ், 40 என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதன் விசாரணை, கோலார் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. ஆசிரியர் நாகேஷ் குற்றம் செய்தது உறுதியானது. வழக்கு நீதிபதி புலிகேசி தேவமானே விசாரித்து, நாகேஷூக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X