பொது செய்தி

இந்தியா

ஏரிகளை ஆக்கிரமித்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவு

Added : செப் 17, 2021
Share
Advertisement
பெங்களூரு-''ஏரிகளை ஆக்கிரமித்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார். கர்நாடக சட்ட மேலவையில் கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் ஸ்ரீகண்டேகவுடாவின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மாதுசாமி கூறியதாவது:சிறிய நீர்ப்பாசனத்துறை கட்டுப்பாட்டில், 3,753 ஏரிகள் உள்ளன.

பெங்களூரு-''ஏரிகளை ஆக்கிரமித்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என, சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார். கர்நாடக சட்ட மேலவையில் கேள்வி நேரத்தில், ம.ஜ.த., உறுப்பினர் ஸ்ரீகண்டேகவுடாவின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மாதுசாமி கூறியதாவது:சிறிய நீர்ப்பாசனத்துறை கட்டுப்பாட்டில், 3,753 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1,092 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 415 ஏரிகளை ஆய்வு செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.ஏரிகளின் ஆக்கிரமிப்பை விட்டு விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆக்கிரமிப்பை அகற்றுவோம்; ஏரிகளை ஆக்கிரமித்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஏரியில் அடைத்துள்ள மண்ணை அள்ளுவது மிகவும் கஷ்டம். மண்ணை அள்ள வேண்டுமானால், நான்கு ஆண்டுகள், டிரக்குகள் நிரந்தரமாக மண்ணை அள்ளி செல்ல வேண்டி வரும். இதற்கு பதில் புதிதாக மூன்று ஏரிகளை அமைக்கலாம். கிராமப்பகுதிகளின் ஏரிகளில் மண்ணை அள்ளுவது எளிது. ஆனால் நகரப்பகுதிகளில் மிகவும் கஷ்டம். அள்ளிய மண்ணை எங்கு கொட்டுவது என, தெரிவதில்லை. தலா ஐந்து ஏரிகளின் மண்ணை அள்ள, எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விவாதம் இல்லாத நிலத்தை, எம்.எல்.ஏ.,க்கள் ஏற்பாடு செய்தால், புதிய ஏரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X