கொரோனா பலி குறித்து போலி தரவுகள்: நீதி விசாரணை கோரும் காங்.,| Dinamalar

கொரோனா பலி குறித்து போலி தரவுகள்: நீதி விசாரணை கோரும் காங்.,

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி: கொரோனா பலி குறித்து பொய்யான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டதாகவும் இதை நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங். கட்சி வலியுறுத்தி உள்ளது.கொரோனாவால் ஏற்பட்ட உயிரிப்புகளை அரசியல் தலையீட்டால் குறைத்து காண்பித்ததாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டி
Corona Death, Congress, Covid 19

புதுடில்லி: கொரோனா பலி குறித்து பொய்யான தரவுகளை மத்திய அரசு வெளியிட்டதாகவும் இதை நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங். கட்சி வலியுறுத்தி உள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட உயிரிப்புகளை அரசியல் தலையீட்டால் குறைத்து காண்பித்ததாக ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.


latest tamil news



'மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தன் இருந்தபோது ஐ.சி.எம்.ஆர். மற்றும் நிடி ஆயோக் உறுப்பினர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கொரோனா பலி குறித்து வெளியிட்ட தரவுகள் அரசியல் தலையீட்டால் பொய்யாக வெளியிடப்பட்டவை' என அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த செய்தி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியானது. அதை சுட்டிக்காட்டி பிரமர் மோடி, முன்னாள் அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், ஐ.சி.எம்.ஆர். மூத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதை நீதிபதி கண்காணிப்பின்கீழ் விசாரிக்க வேண்டும் என்றும் காங். வலியுறுத்தி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X