பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை வேட்டை துவக்கம்

Added : செப் 17, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஒரு பக்கம் வேட்பு மனு தாக்கல் பெறும் நிலையில், தேர்தல் நடத்துவதற்கான அடிப்படை பணிகள், பாதுகாப்பு விஷயம், கோப்புகளை சரிபார்ப்பது, ஓட்டு பெட்டிகளை ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.வாக்காளர்களுக்கு பண வினியோகத்தை
 பறக்கும் படை வேட்டை துவக்கம்

காஞ்சிபுரம்--காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.ஒரு பக்கம் வேட்பு மனு தாக்கல் பெறும் நிலையில், தேர்தல் நடத்துவதற்கான அடிப்படை பணிகள், பாதுகாப்பு விஷயம், கோப்புகளை சரிபார்ப்பது, ஓட்டு பெட்டிகளை ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்புவது போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.வாக்காளர்களுக்கு பண வினியோகத்தை தடுப்பதற்காகவும், பரிசு பொருட்கள் கொடுப்பதை முன்கூட்டியே தடுக்கவும், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மூன்று 'ஷிப்டு'களில், தலா மூன்று பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐந்து ஒன்றியங்களில் மொத்தம் 15 பறக்கும் படையினர் செயல்பட துவங்கி உள்ளனர்.மாவட்டத்தின் பல இடங்களில், பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த் துறை அதிகாரிகள், போலீசார், 'வீடியோ கேமரா மேன்' ஆகியோர் அடங்கிய குழு, பறக்கும் படையாக செயல்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X