பொது செய்தி

இந்தியா

'பண்டிகை காலம் இது; கவனமாய் இருங்கள்!'

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: 'பண்டிகை காலம் துவங்கி விட்டதால், அடுத்து வரும் மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியதாவது:ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் திடீரென கூடுவது, தொற்று
Festival Time, Covid, CoronaVirus, கொரோனா, பண்டிகை, எச்சரிக்கை

புதுடில்லி: 'பண்டிகை காலம் துவங்கி விட்டதால், அடுத்து வரும் மாதங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா கூறியதாவது:ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் திடீரென கூடுவது, தொற்று பரவலை எளிதாக்கும். அடுத்து வரும் மாதங்களில் பண்டிகை காலம் துவங்குவதால், பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். இதனால், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, தடுப்பூசி போட்டுக் கொள்வது, தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது, பயணங்களை பாதுகாப்புடன் மேற்கொள்வது, பொறுப்புணர்வுடன் பண்டிகைகளை கொண்டாடுவது ஆகிய நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.தற்போதைய சூழலில் தடுப்பூசி 'பூஸ்டர்' தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




அறிகுறிகளற்ற தொற்று: கவலை வேண்டாம்!


கொரோனா வைரசால் குழந்தைகள் பாதிக்கப்படுவது மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இது குறித்து, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறியதாவது: குழந்தைகளுக்கு அறிகுறிகள் அற்ற தொற்று பாதிப்பு ஏற்பட்டால், கவலை அடைய தேவையில்லை. அதன் தீவிரம் மிக குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-செப்-202119:13:10 IST Report Abuse
M  Ramachandran ஹிந்து எதிர்ப்பு பண்டிகை காலங்களில் தீவிர மாக கடைபிடிக்கப்படும். ஆனால் அவர்கள் எல்ல கோயிலுள்ளும் பெரிய கூட்டத்துடன் உலாவருவார்கள்.சட்டம் இயற்றுபவருக்கு அதை மீர உரிமை உண்டு போது மக்களுக்கான சட்டம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
17-செப்-202119:09:29 IST Report Abuse
M  Ramachandran அதுதான் எல்ல இந்து பண்டிகைகளுக்கும்தடை போட்டாசே பின் என்ன? ஆனால் கூட்டம் கூடும் யிடக்ங்களான வணிக வளாக கடைகளுக்கும் சினிமா மற்றும் டாஸ் மார்க் கடைகளுக்கு தாராளம். மாமிச கடைகளுக்கும் தடையில்லை. ஹிந்து துவேஷ அரசை தேர்ந்தெடுத்த அதி மேதாவிகள் இப்போ குதூகலிக்கட்டும்.நிச்சயம் அதற்க்கு சரியான பலனை அனுபவிப்பார்கள்.
Rate this:
Cancel
17-செப்-202116:23:34 IST Report Abuse
அப்புசாமி ஜாக்கிரதை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X