பிரதமர் மோடிக்கு ஒரே வரியில் வாழ்த்து சொன்ன ராகுல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடிக்கு ஒரே வரியில் வாழ்த்து சொன்ன ராகுல்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (97)
Share
புதுடில்லி: பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். காங்., எம்.பி., ராகுல், மோடிக்கு " ஹேப்பி பர்த்டே மோடிஜி ! "- என ஒரே வரியில் வாழ்த்து கூறியுள்ளார்.பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாள் இன்று (செப்.,17) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமரின் பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். மோடியின்
PMModi, HappyBdayModiji, 71st Birthday, Modi, Wishes, பிரதமர், மோடி, பிறந்தநாள், வாழ்த்து, தலைவர்கள்

புதுடில்லி: பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். காங்., எம்.பி., ராகுல், மோடிக்கு " ஹேப்பி பர்த்டே மோடிஜி ! "- என ஒரே வரியில் வாழ்த்து கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாள் இன்று (செப்.,17) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமரின் பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். மோடியின் வாரணாசி லோக்சபா தொகுதியில், இரவில் 71 தீபங்கள் ஏற்றி வைக்கப்பட்டன. பிரதமரின் பிறந்தநாளுக்காக 71 கிலோ எடை கொண்ட விசேஷமான லட்டு தயாரிக்கப்பட்டது. போபாலில் 71 அடி நீள தடுப்பூசி வடிவிலான கேக்கை வெட்டி பா.ஜ.,வினர் பிரதமரின் பிறந்தநாளைக் கொண்டாடினர். பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


latest tamil news




ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:


பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிடைக்க விரும்புகிறேன், மேலும் தேசத்திற்கு தொடர்ந்து சேவை புரிய விரும்புகிறேன். இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.



துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:


இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். அவரது தொலைநோக்கு, முன்மாதிரியான தலைமை மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவை தேசத்தின் சகல வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. அவருக்கு நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துகள். இவ்வாறு துணை ஜனாதிபதி கூறியுள்ளார்.




ராகுல் ஒரு வரியில் என்ன சொன்னார் ?


காங்., எம்.பி., ராகுல் அவரது டுவிட்டரில் ஒரு வரியில் வாழ்த்தை சொல்லி முடித்தார்.




மேலும் உலக தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தங்களின் வாழ்த்தை அவரவர் டுவிட்டரில் பதவிட்டு வருகின்றனர்.



முதல்வர் ஸ்டாலின்


பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X