தயவுசெய்து நீட் தற்கொலைகளை கவுரவிக்காதீர்கள்...| Dinamalar

தயவுசெய்து 'நீட்' தற்கொலைகளை கவுரவிக்காதீர்கள்...

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (48)
Share
நீட் தேர்வுக்காக தற்கொலை செய்த தங்கை கனிமொழிக்கு வீரவணக்கம். நீட் தேர்வு ஏற்படுத்திஉள்ள அச்சம், அச்சத்தால் உருவான மன அழுத்தம் கனிமொழியைக் காவு வாங்கி விட்டது. அவர், பிளஸ் 2 தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றவர். இதற்கு மோடி அரசே பொறுப்பு.- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்'வீரவணக்கம் செலுத்தியதால், சவுந்தர்யா என்றொரு மாணவியும் பலியாகியுள்ளார்.
தயவுசெய்து 'நீட்' தற்கொலைகளை கவுரவிக்காதீர்கள்...

நீட் தேர்வுக்காக தற்கொலை செய்த தங்கை கனிமொழிக்கு வீரவணக்கம். நீட் தேர்வு ஏற்படுத்திஉள்ள அச்சம், அச்சத்தால் உருவான மன அழுத்தம் கனிமொழியைக் காவு வாங்கி விட்டது. அவர், பிளஸ் 2 தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றவர். இதற்கு மோடி அரசே பொறுப்பு.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'வீரவணக்கம் செலுத்தியதால், சவுந்தர்யா என்றொரு மாணவியும் பலியாகியுள்ளார். தயவுசெய்து 'நீட்' தற்கொலைகளை கவுரவிக்காதீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.



முதுநிலை ஆசிரியர் பணித்தேர்வில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும் என்ற தேர்வு வாரியத்தின் அறிவிப்பை, தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'வயதானவர்களால் பொறுமை யாக பாடம் நடத்த முடியாது என அரசு நினைத்திருக்கக் கூடும்...' என, சொல்லத் தோன்றும் வகையில் நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.



நடிகர் ரஜினியின் அண்ணாத்த பட 'கட் - அவுட்'டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த விவகாரத்தை, ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டித்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இதுவரை தன் ரசிகர்களை நேரடியாக கண்டிக்காத நடிகர் ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
- தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர், சு.ஆ.பொன்னுசாமி


'இதை விட பெரிதாக அபிஷேகங்கள் செய்யப்பட வேண்டும் என ரஜினி நினைத்திருக்கலாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர், சு.ஆ.பொன்னுசாமி அறிக்கை.



தமிழகத்தில் கடந்த அரை நுாற்றாண்டு காலமாக மொழி மற்றும் கல்வியை வைத்து ஒரு சில கட்சிகள் அரசியல் செய்கின்றன. பல நாடுகளில் தங்களது தாய்மொழியுடன் மூன்று, நான்கு மொழிகளை மாணவர்கள் கூடுதலாக கற்று கொள்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழிகள் மாணவர்களுக்கு தெரியாது.
- புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி


latest tamil news




'இதைத் தான், தமிழகத்தின் ஐம்பதாண்டு கால அவலம் என்கின்றனர்...' என, நினைவுபடுத்தத் தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை.



'நீட்' தேர்வு ஏற்படுத்திய அச்சத்தால் நிகழும் மாணவர்களின் மரணங்களுக்கு நாமும், நம் உறுதியற்ற நிலைப்பாடுகளுமே காரணம். தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான வழிகளை கண்டு, மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
- சினிமா இயக்குனர் பா.ரஞ்சித்


மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால் தான் முன்னேற்றம் கிடைக்கும் என கூறும் வகையில் சினிமா படம் எடுத்து, மாணவர்களை திருத்தப் பாருங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், சினிமா இயக்குனர் பா.ரஞ்சித் அறிக்கை.



தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் 'போர்டு' தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதே... ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கம்யூனிஸ்ட்டுகளின் சத்தத்தையே கேட்கவில்லையே... ஓ... நடைபெறுவது தி.மு.க., ஆட்சி அல்லவா!
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


''நேரத்திற்கு ஏற்ப, விதவிதமாக குரல் கொடுப்பதும், அமுக்கி வாசிப்பதும், கம்யூ.,க்களுக்கு கை வந்த கலை...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X