பொது செய்தி

இந்தியா

12 ராசிகளுக்கான வாரபலனும் பரிகாரமும்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021
Share
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை ( 17.9.2021 - 23.9.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சுக்கிரன், செவ்வாய், புதனால் ஆதாயம் சேரும். பைரவர் வழிபாடு நலம் அளிக்கும்அசுவினி: தடைப்பட்ட விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். காணாமல் போன முக்கியப் பொருள் கிடைக்கும். நியாயத்தை
வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம்,  கன்னி,துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை ( 17.9.2021 - 23.9.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சுக்கிரன், செவ்வாய், புதனால் ஆதாயம் சேரும். பைரவர் வழிபாடு நலம் அளிக்கும்

அசுவினி: தடைப்பட்ட விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். புத்துணர்ச்சி பெறுவீர்கள். காணாமல் போன முக்கியப் பொருள் கிடைக்கும். நியாயத்தை நிலைநாட்டுவீர்கள்.

பரணி: உறவினர்கள் உதவுவர். வாகனம் பழுதாகி பிறகு சரியாகும். விடாமுயற்சியால் லாபம் காண்பீர்கள். பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் செயல்படுவர். பெண்கள் கணவரால் நன்மை பெறுவர்.

கார்த்திகை 1ம் பாதம்: ஒற்றுமை நிலவும். பெண்களின் கண்ணோட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் எதிர்பார்த்த துறை கிட்டும். வியாபாரத்திற்கான பயணங்களால் லாபம் கிடைக்கும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.


ரிஷபம்


குரு, புதன், சுக்கிரனால் நன்மை கிடைக்கும்.துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.


latest tamil newsகார்த்திகை 2,3,4: வீடு வாங்குவது பற்றி திட்டமிடுவீர்கள். திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. உறவினரைச் சந்தித்து மகிழ்வீர்கள். மகன்/ மகளால் மகிழ்ச்சி கூடும்.

ரோகிணி: அழகான பொருட்கள் வாங்குவீர்கள். நேரம் காலம் பார்க்காமல் உழைத்து நன்மை அடைவீர்கள். சிலருக்குப் பணியிடமாற்றம் வரக்கூடும்.

மிருகசீரிடம் 1,2: நண்பர்கள் உதவுவர். புது வேலை கிடைக்கும். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். பொறுப்புகள் அதிகமாகும். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்படும்.


மிதுனம்


புதன், சுக்கிரன், புதன் அதிர்ஷ்ட அமைப்பில் உள்ளனர். வீரபத்திரர் வழிபாடு நலம் தரும்.

மிருகசீரிடம் 3,4: வாழ்வில் நன்மை அதிகரிக்கும். காதலர்களை இணைப்பீர்கள். வாய்ப்புகளை பயன்படுத்தி வெல்வீர்கள். புதியவர்களை நம்ப வேண்டாம்.

திருவாதிரை: கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பாராத சந்தோஷத்தைச் சந்திப்பீர்கள். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

புனர்பூசம் 1,2,3: கடன் வாங்கும் எண்ணம் வேண்டாம். யாரிடமும் வம்பு பேச வேண்டாம். மனதில் பட்டதை அழகான முறையில் வெளிப்படுத்துவீர்கள். வேலையை விடும் முடிவை தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்: 16.9.2021 பகல் 12:47 மணி - 18.9.2021 மாலை 4:59 மணி


கடகம்


குரு, சுக்கிரன், நன்மைகளை வழங்குவர். சிவன் வழிபாடு துன்பம் போக்கும்.

புனர்பூசம் 4: எதிர்பாராத வகையில் நல்ல விஷயம் நடக்கும். பணியாளர்களின் மதிப்பு உயரும். கவலைகள் மறையும். பொது இடத்தில் புதியவர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

பூசம்: உங்களால் முடியும் என்ற விஷயங்களில் மட்டும் வாக்கு கொடுங்கள். நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள அலைச்சல் நன்மையில் முடியும்.

ஆயில்யம்: உங்களைப் பயன்படுத்தி முன்னேறுபவர்களிடம் கவனமாக இருங்கள். திடீர் இடமாற்றத்திற்கு வாய்ப்புள்ளது. நண்பர்களிடையே விரிசல் வந்தாலும் விட்டுக் கொடுத்து சரிசெய்வீர்கள்.

சந்திராஷ்டமம்: 18.9.2021 மாலை 5:00 மணி - 20.9.2021 இரவு 11:18 மணி


சிம்மம்


சனி, புதன், சூரியன் அனுகூல பலன் தருவர். சூரியன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.


latest tamil news


மகம்: மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் அறிகுறிகள் தென்படும்

பூரம்: திடீர் நன்மைகள் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை அமையும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தருவதை தவிர்க்கவும்.

உத்திரம் 1: உரிமைகள் கிடைக்கும். வார ஆரம்பத்தில் நன்மை கிட்டும். பணியாளர்களுக்குத் திருப்தியான நிலை நிலவும். விலையுயர்ந்த பொருள் வாங்குவதை தவிர்க்கவும். வாரக்கடைசியில் பேச்சில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 20.9.2021 இரவு 11:19 மணி - 23.9.2021 காலை 8:05 மணி


கன்னிகுரு, சந்திரன் புதன் அதிர்ஷ்டம் அளிப்பர். காமாட்சி வழிபாடு வளம் தரும்.

உத்திரம் 2,3,4: கண்டும் காணாமல் இருந்தவர்கள் கூட நெருங்கி வருவர். சவால்கள் நிறைந்த செயல்களில் ஈடுபட நேரிடலாம். பணியாளர்கள் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவர்.

அஸ்தம்: உற்றாருடன் இருந்த கருத்துவேறுபாடு தீரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். பணியாளர்களுக்கு சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை 1,2: மன்னிக்கும் குணம் உண்டாகும். ஊதிய உயர்வு கிடைக்கக் கூடும். வீண்கவலை, பயத்தை உதறுங்கள். வாழ்வில் புத்தொளி பிறக்கும். நிம்மதி மீளும். பேச்சில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 23.9.2021 காலை 8:06 மணி - 25.9.2021 மாலை 6:59 மணி


துலாம்


சுக்கிரன், குரு, புதன், சந்திரன் அனுகூலமாக உள்ளனர். மகாலட்சுமி வழிபாடு சுபிட்சம் அளிக்கும்.

சித்திரை 3,4: பணியாளர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்., நண்பர்களுடன் கருத்து வேறுபாடு நீங்கும். திடீர் முடிவு எடுப்பதை தவிர்க்கவும்.

சுவாதி: முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். தாய்வழி உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வரும். நல்லவர்களின் சந்திப்பு நிகழும்.

விசாகம் 1,2,3: பிள்ளைகளைப் பற்றிய கவலை நீங்கும். வார நடுப்பகுதியில் வாங்கியகைமாற்றைத் திருப்பித் தருவீர்கள். எதிர்காலம் பற்றிய வீணான பயம் வேண்டாம்.


விருச்சிகம்


சனி, செவ்வாய், புதன் நன்மைகளைத் தருவர். கார்த்திகேயன் வழிபாடு வளம் தரும்.

விசாகம் 4: எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்தேறும். மனதில் அன்பு அதிகரிக்கும். பண வரவு கூடும். கடன் தீர்ப்பதற்கும், சேமிப்பு அதிகமாவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

அனுஷம்: வேலைச்சுமையால் இருந்த சோர்வு நீங்கும். செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வெளியிடங்களில் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. நட்பு வட்டம் விரியும்.

கேட்டை: மற்றவர் மத்தியில் மதிப்பு உயரும். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வார ஆரம்பத்தில் சிறு பயமும் பின்னர் உற்சாகமும் ஏற்படும். பழைய நட்பைப் புதுப்பிப்பீர்கள்.


தனுசுகுரு, சந்திரன், சுக்கிரன் நற்பலன்களை தருவர். குருவாயூரப்பன் வழிபாடு நலம் தரும்.

மூலம்: அலுவலகத்தில் வியப்பான விஷயம் ஒன்று காத்திருக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர் செயல் கோபத்தை ஏற்படுத்தக் கூடும். பொறுமையுடன் செயல்பட்டு ஜெயிப்பீர்கள்.

பூராடம்: முக்கிய முடிவுகள் எடுக்க அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெறவும். பணியில் ஈடுபாடு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டபடி சுப நிகழ்ச்சி நடக்கும்.

உத்திராடம் 1: மனதில் புரட்சிகரமான எண்ணங்கள் தோன்றும். பல நாட்கள் திட்டமிட்ட பொருளை வாங்குவீர்கள். தாயாரின் ஆசையை நிறைவேற்றுவீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியாது.


மகரம்சுக்கிரன், கேது, சந்திரனால் நன்மை உண்டு. மகாவிஷ்ணு வழிபாடு வளம் தரும்.

உத்திராடம் 2,3,4: உங்கள் உயர்வைத் தக்க வைத்துக் கொள்ள மற்றவர்களைத் தாழ்த்த வேண்டாம். குற்ற உணர்வில் புழுங்கிய ஒருவரை காப்பாற்றுவீர்கள். பிள்ளைகளால் நன்மை ஏற்படும்.

திருவோணம்: இத்தனை நாள் தெரியாத புதிய விஷயங்களை கற்க ஆரம்பிப்பீர்கள். செயல்பாடுகளில் சரியாகத் திட்டமிட்டு வெல்வீர்கள். வீண்பேச்சால் சிக்கலில் மாட்ட வேண்டாம்.

அவிட்டம் 1,2: பேச்சு, செயலில் நிதானம் தேவை. குடும்பத்தில் ஒற்றுமை கூடும். பணியாளர்களிடம் விட்டுக் கொடுத்து போவது அவசியம். ஜாமின் கையெழுத்து போடாதீர்கள்.


கும்பம்


சுக்கிரன், சந்திரனால் மிகுந்த நன்மை ஏற்படும். நரசிம்மர் வழிபாடு சுபிட்சம் தரும்.

அவிட்டம் 3,4: மகிழ்ச்சியும் நேர்மறை சிந்தனையும் இருக்கும். பலவீனங்களை திருத்திக் கொள்வீர்கள். பெருந்தன்மை எண்ணம் மேலோங்கும். அலைச்சலும், செலவினமும் தவிர்க்க முடியாது.

சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். மனதில் பட்டதைப் பேசுவீர்கள். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். உங்கள் திட்டங்களை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

பூரட்டாதி 1,2,3: சூழ்நிலை அறிந்து பேசுவீ்ர்கள். பரபரப்பான செயல்கள் நிகழும். வெளிநாட்டில்இருந்து நல்ல தகவல் வரும். எதையும் இயல்பாக எடுத்து செயல்படுவீர்கள்.


மீனம்குரு, புதன், சனி அதிர்ஷ்டத்தை வழங்குவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

பூரட்டாதி 4: உங்களின் தனித்திறன் வெளிப்படும். சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். உறவினர் மத்தியில் நற்பெயர் காண்பீர்கள். விலகிச் சென்றவர் வலிய வந்து பேசினால் அவர்களை நம்ப வேண்டாம்.

உத்திரட்டாதி: சிறு இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி இருக்கும். பொழுது போக்கு அம்சங்களில் மனதை செலுத்த வேண்டாம். மூத்தவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள்.

ரேவதி: வீண் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டாம். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X