அரசியல் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது கிடைக்கவில்லை: முன்னாள் அமைச்சர் வீரமணி

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
வேலூர்: ‛‛லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது எனது வீட்டில் கிடைக்கவில்லை'', என அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அ.தி.மு.க. 'மாஜி' அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான சொகுசு பங்களா, நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், கல்லுாரி உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில்
வீரமணி, அதிமுக, ரெய்டு, லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை,

வேலூர்: ‛‛லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது எனது வீட்டில் கிடைக்கவில்லை'', என அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அ.தி.மு.க. 'மாஜி' அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான சொகுசு பங்களா, நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், கல்லுாரி உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் வீரமணி 654 சதவீத சொத்துக்களை சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சோதனை முடிந்த பிறகு வீரமணி நிருபர்களிடம் கூறியது:
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் வேலை செய்ய விடாமல் தடுப்பதற்காகவும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம். ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை தடுப்பதற்காக திமுக அரசு இது போன்ற செயலில் ஈடுபட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் என்ன தேடி வந்தார்கள் என்று கேட்டதற்கு பதில் சொல்ல வீரமணி மறுத்துவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
18-செப்-202100:39:10 IST Report Abuse
Aarkay கீழே விழுந்தும், மீசையில் மண் ஓட்டவில்லையா? அவ்வளவும், நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து சம்பாதித்த சொத்துக்களா? ஐயோ பாவம் அவ்வளவு நல்லவரா நீங்கள்?
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-செப்-202100:35:51 IST Report Abuse
DARMHAR எங்கேயாவது சொந்த கிராமத்தில் வைக்கைப்போரில் கூட ஒளித்து வைக்கும் வழக்கம் கூட சில திருடர்களுக்கு உண்டு.
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-செப்-202100:18:46 IST Report Abuse
DARMHAR எத்தனை நாள் தான் ஏமாற்றுவான்? கண்டிப்பாக ஒரு நாள் கண்டிப்பாக இவன் ஆட்டம் எல்லாம் அடங்கி சிறையில் கம்பி எண்ணப்போகிற காலம் வரும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X