லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது கிடைக்கவில்லை: முன்னாள் அமைச்சர் வீரமணி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது கிடைக்கவில்லை: முன்னாள் அமைச்சர் வீரமணி

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (30)
Share
வேலூர்: ‛‛லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது எனது வீட்டில் கிடைக்கவில்லை'', என அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அ.தி.மு.க. 'மாஜி' அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான சொகுசு பங்களா, நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், கல்லுாரி உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில்
வீரமணி, அதிமுக, ரெய்டு, லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை,

வேலூர்: ‛‛லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது எனது வீட்டில் கிடைக்கவில்லை'', என அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அ.தி.மு.க. 'மாஜி' அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான சொகுசு பங்களா, நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், கல்லுாரி உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். முதல் தகவல் அறிக்கையில் வீரமணி 654 சதவீத சொத்துக்களை சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சோதனை முடிந்த பிறகு வீரமணி நிருபர்களிடம் கூறியது:
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் வேலை செய்ய விடாமல் தடுப்பதற்காகவும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம். ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வந்தது கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை தடுப்பதற்காக திமுக அரசு இது போன்ற செயலில் ஈடுபட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் என்ன தேடி வந்தார்கள் என்று கேட்டதற்கு பதில் சொல்ல வீரமணி மறுத்துவிட்டார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X