பொது செய்தி

இந்தியா

ட்ரோன் தயாரிப்பில் ரூ.5,000 கோடி முதலீடு; 10,000 பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி: தற்சார்பு இந்தியா திட்டத்தின் லட்சியத்தை அடையும் நோக்கில் மற்றொரு நடவடிக்கையாக, ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்த திட்டம் குறித்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்

புதுடில்லி: தற்சார்பு இந்தியா திட்டத்தின் லட்சியத்தை அடையும் நோக்கில் மற்றொரு நடவடிக்கையாக, ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.



latest tamil news



இந்த திட்டம் குறித்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளதாவது: ட்ரோன் மற்றும் ட்ரோன் பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.120 கோடி வழங்கப்படுகிறது. ட்ரோன் துறையின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவை விட, 1.5 மடங்கு இது அதிகமாகும். இத்துறையில் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டு, ரூ.900 கோடி விற்றுமுதலும், 10,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் உருவாகும்.


latest tamil news




5 லட்சம் வேலைவாய்ப்பு


வரும் 2030க்குள் சர்வதேச ட்ரோன் மையமாக இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இந்த இலக்கை எட்ட தேவையான ஆதரவை தொழில்துறை, சேவை விநியோகம் மற்றும் நுகர்வோருக்கு அமைச்சகம் வழங்கும். ட்ரோன் சேவைகள் துறை செயல்பாடுகள், சரக்கு போக்குவரத்து, தரவு செயல்முறை, போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்ட பல முறைகளில் மிகப்பெரியது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.30,000 கோடி எனும் அளவில் இது வளரும்; ஐந்து லட்சம் வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
17-செப்-202121:01:06 IST Report Abuse
Vena Suna நல்ல செய்தி என்னவென்றால் ட்ரோன் மூலம் காங்கிரஸ் திமுகவினர் கண்காணிக்க படுவர்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
17-செப்-202120:26:17 IST Report Abuse
Rajagopal எதிர்கால யுத்தங்கள் ட்ரோன் மூலமாகத்தான் நடக்க இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், பல மேற்கத்திய நாடுகள், சீனா, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகள் பெரிய அளவில் ட்ரோன் உற்பத்தியில் இறங்கியுள்ளன. அஜர்பைஜான் நாடு, துருக்கியில் உற்பத்தி செய்யப்பட்ட ட்ரோன்களை வைத்து ஆர்மீனியாவை போரில் தோற்கடித்தது. இஸ்லாமிய நாடுகள் பெரிய அளவில் இந்த நவீன ஆயுதத்தை உபயோகப்படுத்த தொடங்கியுள்ளன. இந்தியா பின் தங்க இயலாது. இறங்கியே ஆக வேண்டும்.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
17-செப்-202113:30:38 IST Report Abuse
Yezdi K Damo வழக்கம் போல உதிரிபாகங்கள் சீன தயாரிப்புதான் . திருஷ்டி சுற்றி தேங்காய் உடைப்பது மட்டும் நாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X