பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்று திரள்வோம்: பிரதமர் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்று திரள்வோம்: பிரதமர்

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி: ‛‛பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் இதனை ஒழிப்பதில் பொதுவான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்'' என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். தஜகிஸ்தானின் துஷான்பே நகரில் நடக்கும் இம் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:அமைதி, பாதுகாப்பு ஆகியவை தொடர்பான
sco, PrimeMinister, narendramodi, extremism, radicalisation, பிரதமர் மோடி, நரேந்திர மோடி, பயங்கரவாதம், ஆப்கன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு,

புதுடில்லி: ‛‛பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் இதனை ஒழிப்பதில் பொதுவான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்'' என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

தஜகிஸ்தானின் துஷான்பே நகரில் நடக்கும் இம் மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:
அமைதி, பாதுகாப்பு ஆகியவை தொடர்பான பிரச்னைகள் இந்த பிராந்தியத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என நான் நம்புகிறேன். பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பது அதிகரித்து வருவது, பெரும் பிரச்னைகளுக்கு அடிப்படை காரணமாக உள்ளது.


latest tamil news



ஆப்கனில் சமீபத்தில் ஏற்பட்ட மாற்றங்களானது, பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களால் ஏற்படும் சவால்களை வெளிப்படையாக எடுத்து காட்டியது. ஆப்கனில் நிலவும் சூழல் அதிர்ச்சி அளிக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதம் மற்றும் அதற்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராக பொதுவான வழிமுறைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

மத்திய ஆசியாவுடன் தொடர்பை அதிகரிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது. தொடர்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை ஒரு தரப்பு மட்டும் எடுக்க முடியாது. பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்த, தொடர்பு திட்டங்கள் ஆனது, வெளிப்படைத்தன்மையுடனும், ஆலோசனை செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். அனைத்து நாடுகளின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் மதிப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X