பொது செய்தி

இந்தியா

கோவிட் 2வது அலையில் உயிரிழப்பு; உண்மை மறைக்கப்பட்டதாக காங்., குற்றச்சாட்டு

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: 'மத்திய அரசு, கோவிட் 2வது அலையில் உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியுள்ளது' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் தெரிவித்து உள்ளதாவது:ஐசிஎம்ஆர் அமைப்பால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை மறைத்துப் போலியான புள்ளிவிவரங்களை வெளியிட அரசியல் தலையீடு அதிகமாக

புதுடில்லி: 'மத்திய அரசு, கோவிட் 2வது அலையில் உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியுள்ளது' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.latest tamil newsகாங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் தெரிவித்து உள்ளதாவது:ஐசிஎம்ஆர் அமைப்பால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை மறைத்துப் போலியான புள்ளிவிவரங்களை வெளியிட அரசியல் தலையீடு அதிகமாக இருந்ததாக அறிவியல் வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐசிஎம்ஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் கோவிட் 2வது அலையில், 4,43,497 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தவறானது. உண்மையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43 லட்சம் அல்லது அதிகபட்சமாக 68 லட்சமாக இருக்கலாம்.


latest tamil newsஐசிஎம்ஆர் அமைப்பில் பணியாற்றிய அறிவியல் வல்லுநர்கள், அவற்றோடு தொடர்புடைய இடங்களில் பணியாற்றிய அறிவியல் வல்லுநர்கள், அரசியல் தலையீடுகள், கட்டுப்பாடுகள் போன்றவை புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் அதிகம் இருந்தன எனக் குற்றம் சாட்டுகின்றனர். இது அறிவியலுக்கு எதிரானது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கும் எதிரானது. லட்சக்கணக்கான மரணங்களைத் தடுப்பதற்கும் எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
17-செப்-202121:25:03 IST Report Abuse
Vena Suna ICMR அப்பவே சொல்ல வேண்டியது தானே ? கொழுக்கட்டை இருந்ததா அவங்க வாயில ? கதை விடாதீங்க
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-செப்-202121:10:59 IST Report Abuse
Sriram V First ask your government in Maharashtra
Rate this:
Cancel
17-செப்-202119:42:01 IST Report Abuse
அப்புசாமி உண்மை தெரிஞ்சாதானே மறைக்க முடியும்? எத்தனை பேர் செத்தாங்கன்னு மாநில அரசுகளுக்கும் தெரியாது. அதனால மத்திய அரசுக்கும் தெரியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X