உள்ளாட்சி பதவிகள் ஏலம்: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி பதவிகள் ஏலம்: மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (10)
Share
சென்னை: உள்ளாட்சி அமைப்புக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளாட்சி பதவி, ஏலம், மாநில தேர்தல் ஆணையம், எச்சரிக்கை

சென்னை: உள்ளாட்சி அமைப்புக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுவோர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.


latest tamil news



மக்களால், தேர்வு செய்யப்பட வேண்டிய பதவிகளை ஏலம் விடுவது, மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல். அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கு புறம்பாக நடக்கும் செயல் தண்டனைக்குரியது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X