பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளரின் முன்மொழிபவர் மனுதாக்கல் செய்ய அனுமதி

Added : செப் 17, 2021
Share
Advertisement
சென்னை : 'வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது சார்பாக முன்மொழிபவர் மனுதாக்கல் செய்யலாம்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஆணையர் அறிக்கை:காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், ஆக., 6, 9ம் தேதிகளில் இரண்டு


சென்னை : 'வேட்பாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது சார்பாக முன்மொழிபவர் மனுதாக்கல் செய்யலாம்' என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆணையர் அறிக்கை:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல், ஆக., 6, 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது.இத்தேர்தலுடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கிறது.இதற்கான மனுதாக்கல், 15ம் தேதி முதல் நடந்து வருகிறது. அரசு விடுமுறை நாட்களிலும் மனுதாக்கல் செய்யலாம்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட பின், வேட்பாளர் மட்டும் நேரில் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.வேட்பாளர், கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருந்தால், அவரை முன்மொழிபவர், நேரில் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர்.வேட்பாளர்கள் மனுதாக்கலின்போது அளித்த உறுதிமொழி ஆவண சான்றுரையின் சுருக்கம், தேர்தல் ஆணையத்தின்,https:/tnsec.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X