போலீஸ் ஸ்டேசன் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்களை நீக்குக: டிஜிபி உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேசன் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்களை நீக்குக: டிஜிபி உத்தரவு

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (12)
Share
சென்னை: போலீஸ் ஸ்டேசன் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே நீக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சில போலீஸ் ஸ்டேசன்களில் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக
Police Station, Name Board, Private Name, DGP, காவல் நிலையம், பெயர் பலகை, தனியார் நிறுவனம், பெயர்கள், நீக்கம், டிஜிபி, சைலேந்திரபாபு

சென்னை: போலீஸ் ஸ்டேசன் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே நீக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சில போலீஸ் ஸ்டேசன்களில் பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அது பொதுமக்களிடையே ஒரு தவறான புரிதலை காட்டும். எனவே தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க வேண்டும். பெயர் பலகையில் போலீஸ் துறையின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். புதிதாக பெயர் பலகை வைக்க போலீஸ் ஸ்டேசனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X