சசி தரூரை கழுதை என்றதற்கு வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்!

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை ஆட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஐ.டி., அமைச்சக செயல்பாடுகளை பாராட்டியதற்காக காங்கிரஸ் எம்.பி., சசிதரூரை கழுதை என்று அம்மாநில காங்., தலைவரும், எம்.பி.,யுமான ரேவந்த் ரெட்டி வசைபாடினார். அதற்கு எதிர்ப்பு எழவே சசி தரூரை அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டதாக சசி தரூரும் குறிப்பிட்டுள்ளார்.திருவனந்தபுரம் எம்.பி., சசி
congress, sasitharoor, hyderabad, telengana, காங்கிரஸ், தெலுங்கானா, சசிதரூர், ரேவந்த் ரெட்டி

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை ஆட்சி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஐ.டி., அமைச்சக செயல்பாடுகளை பாராட்டியதற்காக காங்கிரஸ் எம்.பி., சசிதரூரை கழுதை என்று அம்மாநில காங்., தலைவரும், எம்.பி.,யுமான ரேவந்த் ரெட்டி வசைபாடினார். அதற்கு எதிர்ப்பு எழவே சசி தரூரை அழைத்து வருத்தம் தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்டதாக சசி தரூரும் குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரம் எம்.பி., சசி தரூர், பார்லிமென்ட் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தலைவராகவும் உள்ளார். சமீபத்தில் ஐதராபாத் சென்றிருந்தவர் காங்கிரஸின் எதிர்கட்சியான ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் ஐ.டி., அமைச்சக செயல்பாடுகளை பாராட்டினார். இது அம்மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர் டி.ஆர்.எஸ்., கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சசி தரூர் அதே அரசை பாராட்டியதால் கோபமடைந்தார்.

இது தொடர்பாக புதனன்று (செப்., 15) செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, சசி தரூரை கழுதை என குறிப்பிட்டார். “ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதால் அவர் விஷயம் தெரிந்தவர் என்று அர்த்தமில்லை. கட்சி அவரை நீக்கும் என நம்புகிறேன். ஐ.டி., அமைச்சரை புகழும் அவர் இங்குள்ள நிலை பற்றியும் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.” என கடுமையாக விமர்சித்தார்.
இதனை கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி எதிர்த்தார். கருத்தை திரும்பப் பெற வேண்டும் என கூறியிருந்தார். மேலும் சில தலைவர்களும் ரேவந்த் ரெட்டியை கண்டித்தனர்.


latest tamil news


இந்நிலையில் சசி தரூரை தொடர்புக்கொண்டு தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் ரேவந்த் ரெட்டி. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். “நான் எனது கருத்துக்களை வாபஸ் பெறுகிறேன். எனது சக மூத்த கட்சிக்காரரை மிகவும் மதிக்கிறேன் என்பதை இங்கு வலியுறுத்துகிறேன். என் வார்த்தைகளால் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு நான் வருந்துகிறேன்.” என கூறியுள்ளார். அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக சசி தரூரும் பதிலுக்கு டுவீட் செய்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
18-செப்-202100:10:19 IST Report Abuse
DARMHAR பின்னே என்ன சாதாரண கழுதையல்ல கோவேறு கழுதை என்று சொல்ல நினத்தாரா ?
Rate this:
Cancel
17-செப்-202122:56:20 IST Report Abuse
SUNDARA RAJAN Mr.Revanth Reddy wrongly mentioned this murderer (SASI THAROOR) as donkey. Because donkey is a friendly and useful animal.
Rate this:
Cancel
17-செப்-202122:56:20 IST Report Abuse
SUNDARA RAJAN Mr.Revanth Reddy wrongly mentioned this murderer (SASI THAROOR) as donkey. Because donkey is a friendly and useful animal.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X