சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த மனு

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி, ஜித்தின் சாய் ஆகியோர், பாதுகாப்பு காரணங்களுக்காக வீடியோ கான்பரன்சிங் முறையில் தங்களிடம் விசாரணை நடத்த வேண்டும், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகரிடம் மனு அளித்து உள்ளனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி,
கோடநாடு, வழக்கு, வீடியோ கான்பரன்சிங், ஐஜி, மனு

ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி, ஜித்தின் சாய் ஆகியோர், பாதுகாப்பு காரணங்களுக்காக வீடியோ கான்பரன்சிங் முறையில் தங்களிடம் விசாரணை நடத்த வேண்டும், மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகரிடம் மனு அளித்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி, காவலாளி ஓம் பகதூர் கொள்ளையரால் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை, ஊட்டியில் உள்ள பழைய எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கிறது.

இந்நிலையில், கோடநாடு வழக்கில் குற்றச் சாட்டப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி, ஜித்தின் சாய் ஆகியோர் வழக்கறிஞர் மூலம் மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: தீபு, சதீஷன், சந்தோஷ்சாமி, ஜித்தின் சாய் ஆகியோர் விசாரணைக்கு வர தயார். சில முக்கிய தகவல்களை அளிக்க இருப்பதால், பாதுகாப்பு கருதியும், கோவிட் பிரச்னையாலும், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.


latest tamil news


தொடர்ந்து, ஊட்டி பிரஸ் கிளப்பில் நிருபர்களை சந்தித்த வழக்கறிஞர்கள் விஜயன், முனிரத்னம், செந்தில் கூறுகையில், கேரளாவில், கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எங்கள் கட்சிக்காரர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால், விசாரணையை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்த வேண்டும் என ஐ.ஜி.,யிடம் மனு அளித்துள்ளோம். நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்பதால், வழக்கறிஞர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
17-செப்-202116:55:38 IST Report Abuse
Nesan எடப்பாடி என்ன ஆனார் ?. இன்று, நாளை கைதுன்னு சொன்னாங்க .... என்ன கப்பம் கட்டிட்டாரோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X