இலங்கையில் அக்., 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொழும்பு: இலங்கையில் கோவிட் பரவலைத் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையில் கோவிட் தடுப்புக் குழுக் கூட்டம் இன்று (செப்., 17) நடைபெற்றது. கூட்டத்தில், கோவிட் பரவலைத் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்துள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்க முடிவு

கொழும்பு: இலங்கையில் கோவிட் பரவலைத் கட்டுப்படுத்த ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன.



latest tamil news


இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தலைமையில் கோவிட் தடுப்புக் குழுக் கூட்டம் இன்று (செப்., 17) நடைபெற்றது. கூட்டத்தில், கோவிட் பரவலைத் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்துள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வரும் அக்., 1ம் தேதி வரை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெலா கூறுகையில், 'இலங்கையில் நேற்றைய (செப்., 16) நிலவரப்படி புதிதாக 2,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 4,98,694 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 11,187 பேர் பலியாகி உள்ளனர்.


latest tamil news


இலங்கையில் தினசரி கோவிட் பாதிப்பு 2,000த்தைக் கடந்து வருவதால், மேற்கொண்டு தொற்று பரவாமல் இருக்க, பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாதிப்பு குறைந்ததும் கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்' என, நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
18-செப்-202110:06:10 IST Report Abuse
M  Ramachandran நம் தமிழ்நாட்டை பார்த்து சுமார் இரண்டு வருடம் ஊரடங்கை நீத்தி உத்தரவு போட்டால் என்ன? ஒரே அடியாக ஐந்தாட்டுதிட்டம்போல் அடுத்த அசெம்பிலி எலெக்ஷன் வரும்வரை நீட்டினால் அடிக்கடி மீட்டிங்க போட்டு நீட்டிப்பதால் நேரம் பணம் விரயமாகிறது.எதற்கு இன்ஸ்டால் மென்ட் போட்டு நீட்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X