பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 17, 2021
Share
Advertisement
செப்., 18, 1945செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்ற சிற்றுாரில், இரட்டைமலை என்பவருக்கு மகனாக 1859 ஜூலை 7ல் பிறந்தவர் சீனிவாசன்.வறுமை மற்றும் ஜாதி கொடுமைக்கு ஆளானார். 1891ல், பறையர் மகாஜன சபையை உருவாக்கினார். அதை, 'ஆதி திராவிட மகாஜன சபை' எனப் பெயர் மாற்றினார். 'பறையன்' என்ற மாத இதழை நடத்தினார்.காந்திக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுக்

இதே நாளில் அன்று


செப்., 18, 1945



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகில் உள்ள கோழியாளம் என்ற சிற்றுாரில், இரட்டைமலை என்பவருக்கு மகனாக 1859 ஜூலை 7ல் பிறந்தவர் சீனிவாசன்.வறுமை மற்றும் ஜாதி கொடுமைக்கு ஆளானார். 1891ல், பறையர் மகாஜன சபையை உருவாக்கினார். அதை, 'ஆதி திராவிட மகாஜன சபை' எனப் பெயர் மாற்றினார். 'பறையன்' என்ற மாத இதழை நடத்தினார்.காந்திக்கு தமிழில் கையெழுத்து போட கற்றுக் கொடுத்தவரும், சீனிவாசன் தான். சென்னை மாகாண சட்டசபையில், 1923 முதல் 1939 வரை உறுப்பினராக பணியாற்றினார். 1930 மற்றும் 1932ல் அம்பேத்கருடன் சென்று, லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார்.இவரின் பணிகளை பாராட்டி பிரிட்டிஷ் அரசு, 'ராவ்சாகிப், திவான் பகதுார், ராவ் பகதுார்' ஆகிய பட்டங்களை வழங்கியது. தன் வரலாற்றை, 'திவான் பகதுார் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஜீவிய சரித்திர சுருக்கம்' என்ற பெயரில் 30 பக்க நுால் ஒன்றை வெளியிட்டார். 1945 செப்., 18ல் தன் 86வது வயதில் இயற்கை எய்தினார்.இரட்டைமலை சீனிவாசன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X