பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி., வரம்பில் வராது கவுன்சில் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
லக்னோ: பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரை, கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான 45வது கவுன்சில் கூட்டம் 20 மாதங்களுக்கு பின் முதல்முறையாக நேற்று நேரடியாக கூடியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019க்கு பின் நடந்த கூட்டங்கள்
GST, petrol, diesel, GST Council meeting


லக்னோ: பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரை, கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான 45வது கவுன்சில் கூட்டம் 20 மாதங்களுக்கு பின் முதல்முறையாக நேற்று நேரடியாக கூடியது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2019க்கு பின் நடந்த கூட்டங்கள் அனைத்துமே 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவே நடந்தன.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நேற்று நடந்த நேரடி கவுன்சில் கூட்டத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றனர். மற்ற மாநிலங்களில் இருந்து நிதித்துறை செயலர்கள், அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.காலை துவங்கிய கூட்டம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து கவுன்சில் பரிசீலிக்க வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்று கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பல்வேறு மாநிலங்கள் இதை ஏற்க மறுத்ததை அடுத்து, கூட்டத்தில் இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இது குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும்.கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகள் அல்லாமல் உயிர் காக்கும் சில விலை உயர்ந்த மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஉயிர் காக்கும் மருந்துகளான 'ஸால்க்ஜெல்ஸ்மா' மற்றும் 'வில்டெப்சோ' ஆகிய மருந்துகள் 16 கோடி ரூபாய் விலை உடையது. இந்த மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


எவை எவைக்கு விலக்கு?'மஸ்குலர் அட்ரோபி' எனப்படும் தசைநார் சிதைவு நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தை தனிப்பட்ட உபயோகத்திற்காக இறக்குமதி செய்கையில் வரி விலக்கு அளிக்கப்படும்.கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'ஆம்போடெரிசின் - பி, டாசிலிசுமாப், ரெம்டெசிவிர், ஹெபாரின் உள்ளிட்ட மருந்துகளுக்கான வரி விலக்கு டிச., 31 வரை தொடரும்.கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு தொடராது.புற்றுநோய் சிகிச்சை மருந்தான 'கீட்ருடா' உள்ளிட்ட மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., வரியில் தளர்வு அளிக்கப்படுகிறது.
மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ள ஏழு மருந்துகளுக்கான வரி, 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.குத்தகைக்கு இறக்குமதி செய்யப்படும் விமானங்களுக்கான ஐ.ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்படுகிறது.டீசலுடன் கலக்க பயன்படும் பயோ டீசலுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. ரயில்வே உதிரி பாகங்களுக்கான வரி, 12 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
விமான நிலைய குத்தகைக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இரட்டை வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு இந்த விலக்கு பொருந்தும்.

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி வகுப்புகளுக்கான செலவில் 75 சதவீதத்திற்கு மேல் அரசு ஏற்கும்பட்சத்தில், அந்த பயிற்சிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.காலணி மற்றும் ஜவுளித்துறைக்கான வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வருகிறது. எழுது பொருள் மற்றும் அதன் உதிரி பாகங்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது.சரக்கு வாகனங்களை இயக்க மாநிலங்கள் வசூலிக்கும் தேசிய அனுமதி கட்டணத்தில் விலக்கு அளிக்க கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.'சிறிய அதிகாரங்களை இழக்க விரும்பவில்லை'மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் ஒராண்டுக்கு பின் நேரடியாக நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், தவிர்க்க முடியாத பணிகள் காரணமாக இந்த கூட்டத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் சில கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறேன். ஜி.எஸ்.டி., செயல்பாடு மற்றும் தொழில்நுட்பம் கடினமாக உள்ளது. ஆங்கிலத்திலும் உள்ளது. இதை புரிந்து கொள்ள முடியாமல் சிறு, குறு வணிகர்கள், வரி ஆலோசகர்களை நாடுவதால் அவர்களுக்கு கூடுதல் செலவாகிறது. அதனால் ஜி.எஸ்.டி., நடைமுறையை இணையத்தில் முழுமையாக தமிழ்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி., அமலால் மாநிலங்களின் சிறிய அளவிலான வரி உரிமைகள் கூட பறிபோய்விட்டன. மாநிலங்களின் சொந்த வருவாயை நிர்வகிப்பதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரி விதிப்பு மட்டுமே தற்போது உள்ளது.இதையும் ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்தால் மாநிலங்களுக்கு சொந்த வரி வருவாய் என்பதே இல்லாமல் போய்விடும். அதனால் இதுபோன்ற சிறிய அதிகாரங்களை நாங்கள் இழக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-செப்-202109:14:14 IST Report Abuse
Kasimani Baskaran மத்திய அரசை விட தமிழகம் போன்ற மாநில அரசுகளுக்கு பேராசை அதிகம் என்பதைத்தான் இது காட்டுகிறது.
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
18-செப்-202112:37:41 IST Report Abuse
Kanthan Iyengaarபெட்ரோல் டீசல் மேல செஸ் மட்டும் எத்தனை சதவிகிதம் னுட்டு கொஞ்சம் புத்திய செலவிட்டு பாரும் வ்வொய்...மாநில அரசுக்கு பங்கு பிரிக்கரத தடுக்க இவா செய்திருக்கிற டகால்டி வேலைய பத்தி கூட கொஞ்சும் பேசும் வ்வொய்......
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
18-செப்-202108:57:51 IST Report Abuse
Kanthan Iyengaar ..உன்மையான அக்கறை இருந்தா இதுல அரசியல் செய்ய மாட்டா.. பழிய தூக்கி அடுத்தவா மேல போடமாட்ட..
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
18-செப்-202109:07:18 IST Report Abuse
Kanthan Iyengaarபி ஜெ பி தான் .. வேற யாரு.. ஆனாலும் இங்க விசுவாசம் ரொம்பா கூட வ்வொய்......
Rate this:
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
18-செப்-202108:56:02 IST Report Abuse
Krishnan G எதெந்த மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன என்ட்ரி வெள்ளை அறிக்கை விட்டால் மக்களுக்கு மிக தெளிவாக புரியும். முக்கியமாக நமது விடியா அரசின் நிலைப்பாடு என்ன என்று நம்ம மக்களுக்கு தெரியவேண்டும் அப்போதுதான் நமது வீடியா முதல்வர், டபுள் வாட்ச் டக்லஸ் போன்றோரின் வெட்டி பேச்சு மக்களுக்கு தெளிவாக புரியும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X