போலீசாரிடம் ரூ.40 கோடி லஞ்சம்: சிக்குகிறார் மஹாராஷ்டிர அமைச்சர்

Updated : செப் 19, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மும்பை:மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்குடன் இணைந்து, தற்போதைய அமைச்சர் அனில் பராப், போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது அம்பலமாகி உள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. குற்றப்பத்திரிகைஇங்கு, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங்கை, மாநில உள்துறை அமைச்சராக
போலீஸ்,ரூ.40 கோடி லஞ்சம்  சிக்குகிறார் மஹாராஷ்டிர அமைச்சர்

மும்பை:மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்குடன் இணைந்து, தற்போதைய அமைச்சர் அனில் பராப், போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றது அம்பலமாகி உள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.


குற்றப்பத்திரிகை

இங்கு, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங்கை, மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் சில மாதங்களுக்கு முன், பணி இடமாற்றம் செய்தார்.இதையடுத்து, அனில் தேஷ்முக் மீது பரம்வீர் சிங் லஞ்ச புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைஅடுத்து தேஷ்முக், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறையினர், சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், அனில் தேஷ்முக்கின் முன்னாள் தனி செயலர் சஞ்சீவ் பலாண்டே மற்றும் உதவியாளர் குந்தன் ஷிண்டேவின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு மும்பையில் 10 உதவி போலீஸ் கமிஷனர்களை பணியிட மாற்றம் செய்து பரம்வீர் சிங் உத்தரவிட்டார்.


மதுபான விடுதி

பின் அந்த உத்தரவை திரும்பப் பெற, பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து 40 கோடி ரூபாயை, போக்குவரத்து துறை அமைச்சர் அனில் பராப் மற்றும் அனில் தேஷ்முக் ஆகியோர் லஞ்சமாக பெற்றுள்ளனர். இந்த விபரமும் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனில் பராப் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர். இதேபோல் ஓட்டல்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட 4.6 கோடி ரூபாய், அனில் தேஷ்முக்கின் செயலர் ஷிண்டேவிடம் வழங்கப்பட்டதும் தெரியவந்து உள்ளது. அனில் தேஷ்முக்கின் உதவியாளர் பலாண்டேவுக்கும் இந்த லஞ்ச விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.


வருமான வரித்துறை சோதனை

மஹா., முன்னாள் உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான அனில் தேஷ்முக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் நாக்பூர், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
18-செப்-202123:50:32 IST Report Abuse
r ravichandran தேர்தலுக்கு முன்னர் எதிரியாக இருந்த இந்த கட்சிகள் பொருந்தா கூட்டணி அமைத்தது கொள்ளை அடிப்பதற்கு தான்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
18-செப்-202115:34:34 IST Report Abuse
r.sundaram அந்த இடங்களையே அவர் எப்படி வாங்கினார் என்று பார்ப்பது உசிதம்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
18-செப்-202110:35:31 IST Report Abuse
Kasimani Baskaran இது போல கேவலமாக ஒரு அமைச்சரை செயல்படவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு நேர்மை பற்றி ஜான் சேனா கிளாஸ் எடுப்பது கோமாளித்தனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X