பொது செய்தி

இந்தியா

50,000 இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

Added : செப் 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:ரயில்வே துறை சார்பில் 18 - 35 வயது வரையிலான 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு, மத்திய அரசு சார்பில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் ஓராண்டுக்கு கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18 - 35 வயது வரையிலான 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி
 50,000 இளைஞர்களுக்கு  தொழில்நுட்ப பயிற்சி

புதுடில்லி:ரயில்வே துறை சார்பில் 18 - 35 வயது வரையிலான 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு, மத்திய அரசு சார்பில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் ஓராண்டுக்கு கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 18 - 35 வயது வரையிலான 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டில்லியில் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:தொழில்நுட்ப பயன்பாடு அதிகரித்துள்ள இந்த காலத்தில், இந்த பயிற்சி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். குக்கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். 'எலக்ட்ரீஷியன், வெல்டர், பிட்டர் மற்றும் மெக்கானிக்' என, நான்கு வகை பயிற்சிகள் நாடு முழுதும் உள்ள 75 ரயில்வே பயிற்சி மையங்களில் அளிக்கப்படும்.

ரயில்வே மையங்கள் வாயிலாகவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலித்து மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த பயிற்சி பெற்றவர்கள் ரயில்வேயில் வேலை கோர உரிமை கிடையாது. முதற்கட்டமாக 1,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஒவ்வொருவருக்கும் 100 மணி நேரம் என அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 50 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சி முடிவில், தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து மையத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X