பொது செய்தி

இந்தியா

ஒலிம்பிக் விளையாட்டு உபகரணங்கள் ஏலம்

Added : செப் 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள், பிரதமர் மோடிக்கு நினைவு பரிசுகளாக வழங்கிய விளையாட்டு உபகரணங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சமீபத்தில் ஜப்பானில் நடந்து முடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், நம் வீரர்கள் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். நாடு திரும்பிய அவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
 ஒலிம்பிக் விளையாட்டு உபகரணங்கள் ஏலம்

புதுடில்லி:ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்கள், பிரதமர் மோடிக்கு நினைவு பரிசுகளாக வழங்கிய விளையாட்டு உபகரணங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் ஜப்பானில் நடந்து முடிந்த ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளில், நம் வீரர்கள் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். நாடு திரும்பிய அவர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது போட்டியில் அவர்கள் உபயோகித்த விளையாட்டு உபகரணங்களை, பிரதமருக்கு நினைவு பரிசுகளாக வழங்கினர்.

அந்த நினைவு பரிசுகளை மத்திய கலாசார துறை அமைச்சகம் ஏலம் விட முடிவு செய்துள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக நேற்று துவங்கிய இந்த ஏலம், அடுத்த மாதம் 7ம் தேதி வரை நடக்கிறது. பாராலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கிருஷ்ணா நாகர் உபயோகித்த பேட்மின்டன் ராக்கெட்டிற்கு 80 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் லலினாகேரே யத்திராஜ் பயன்படுத்திய பேட்மின்டன் ராக்கெட்டிற்கு, 50 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா பயன்படுத்திய ஈட்டிக்கு, ௧ கோடி ரூபாயும், குத்துச் சண்டையில் வெண்கலம் வென்ற லாவ்லினா பொர்கோஹெய்ன் அணிந்திருந்த கையுறைகளுக்கு 80 லட்சம் ரூபாயும் குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப் பட்டு உள்ளன. 'பென்சிங்' வீராங்கனை பவானி தேவியின் 'பென்ஸ்' வாளுக்கு 60 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.மேலும், பல வீரர்களின் உபகரணங்களும் இதில் ஏலம் விடப்படுகின்றன. இதன் வாயிலாக 10 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X