பிரிட்டன் இளவரசர் பிலிப் உயில் 90 ஆண்டு 'சீல்' வைக்க உத்தரவு

Updated : செப் 17, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லண்டன்:'பிரிட்டன் இளவரசர் பிலிப் எழுதிய உயிலை, 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும்' என, லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 95. இவரது கணவர் இளவரசர் பிலிப், ஏப்., மாதம், 99 வயதில் மரணம் அடைந்தார். இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.இதன்படி அவரது
 பிரிட்டன் இளவரசர் பிலிப் உயில் 90 ஆண்டு 'சீல்', உத்தரவு

லண்டன்:'பிரிட்டன் இளவரசர் பிலிப் எழுதிய உயிலை, 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும்' என, லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 95. இவரது கணவர் இளவரசர் பிலிப், ஏப்., மாதம், 99 வயதில் மரணம் அடைந்தார்.

இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பாக லண்டன் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.இதன்படி அவரது உயிலில் உள்ள விபரங்களை வெளிப்படுத்தாமல் இருக்க, அதை 90 ஆண்டுகள் 'சீல்' வைத்து பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news



உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

மறைந்த இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கவுரவத்திற்காக தன் உயில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இறையாண்மை மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களின் கவுரவத்தை பாதுகாக்க, தனி நபர்களின் தனிப்பட்ட ரகசியங்களுக்கான பாதுகாப்பு அவசியமாக உள்ளது. எனவே இளவரசர் பிலிப்பின் உயிலை 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க உத்தரவிடப்படுகிறது. உயிலின் நகலை பதிவு செய்யவோ, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பிரிட்டனில் எந்த ஒரு நபரின் உயிலும் பொது ஆவணமாக கருதப்பட்டு வருகிறது.
ஆனால் அரச குடும்பத்தினரின் உயில் மட்டும், அதை சார்ந்தவர்களின் விருப்பத்திற்கு இணங்க உயர் நீதிமன்ற உத்தரவின் படி, சீல் வைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
18-செப்-202107:28:04 IST Report Abuse
Sanny இதை விட அந்த உயில்களை குப்பையில் போட்டு எரிப்பது மேல். டயானாவுக்கு செய்த கொடுமை, கொலை எல்லாம் சொல்லி இருப்பார். அதான் வெளியிட முடியவில்லை, உயில் என்பது தனக்குப்பின் என்ன யாருக்கு சொந்தம் என்பதுதான், அதைவிட எல்லாவற்றையும் அவர் போகும்போது அதையும் அவருபோன மாயணத்துக்கே எடுத்த போயிருக்கலாம்.
Rate this:
Cancel
Sundara Raman - bengaluru,இந்தியா
18-செப்-202105:49:12 IST Report Abuse
Sundara Raman இங்கிலாந்தில் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இதில் ரகசியம் என்ன வேண்டியிருக்கிறது.
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
18-செப்-202105:15:28 IST Report Abuse
MANIAN K தொண்ணூறு ஆண்டுகளுக்கு பிறகு “கவுரவம்” போனால் சரி. இப்போது காக்க வேண்டும் திருடிய பொருட்களை “கர்வத்தோடு” காட்சி படுத்தும் நாடல்லவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X