அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாணி பவுடருக்கு வருது தடை எலி மருந்துக்கும் கட்டுப்பாடு

Added : செப் 17, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதால், சாணி பவுடருக்கு தடை விதிப்பதுடன், எலி மருந்து, பால்டாலுக்கும் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நடந்த, உலக தற்கொலை தடுப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியில்
 சாணி பவுடருக்கு வருது தடை எலி மருந்துக்கும் கட்டுப்பாடு

சென்னை:''தமிழகத்தில் ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்வதால், சாணி பவுடருக்கு தடை விதிப்பதுடன், எலி மருந்து, பால்டாலுக்கும் கட்டுப்பாடு விதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நடந்த, உலக தற்கொலை தடுப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி:

இந்த மன நல காப்பகத்தில் 20 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அவற்றில், சென்னையில் உள்ள பிரதான அரசு மருத்துவ மனைகளுக்கு தேவையான காய்கறிகள் விளைவிக்கப்படும். இதில், மனநல சிகிச்சை முடிந்து போக்கிடம் இல்லாதவர்கள் பணியமர்த்தப்படுவர். இதன் வாயிலாக கிடைக்கும் லாபம், அவரவர் வங்கி கணக்குகளில் சேமிக்கப்படும்.

தமிழகத்தில் ஆண்டுக்கு, 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேர் வரை விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். அதை விட அதிகமாக, ஆண்டுக்கு 15 ஆயிரம் முதல் 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஒருவருக்கு தற்கொலை எண்ணம் வந்து விட்டால், இரண்டு, மூன்று முறை முயன்று தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது.

தற்கொலை செய்து கொள்வோரில், 20 சதவீதம் பேர் துாக்கிட்டு இறக்கின்றனர்; 80 சதவீதம் பேர் சாணி பவுடர், எலி மருந்து, பால்டால் போன்ற விஷ மருந்துகளை சாப்பிட்டு இறக்கின்றனர்.தற்போது வணிக பயன்பாட்டில் உள்ள சாணி பவுடர், அதிக விஷ தன்மையுடன் உள்ளது. எனவே, அவற்றை முழுமையாக தடை செய்ய, முதல்வருடன் ஆலோசித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

எலி மருந்து, பூச்சிக்கொல்லி போன்ற மருந்துகளை, பார்வையில் தென்படாதவாறு, கடைகளில், தனி பெட்டகத்தில் வைக்க வேண்டும். தனியாக வந்து கேட்பவருக்கு வழங்கக் கூடாது. இதற்கான கட்டுப்பாடுகளும் விரைவில் அறிவிக்கப்படும். மத்திய அரசிடமிருந்து தேவையான அளவு தடுப்பூசி வரவில்லை. ஆனாலும், கையிருப்பில் இருக்கும் தடுப்பூசி வாயிலாக, நாளை தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


பெற்றோருக்கு ஆலோசனை

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, '104' மருத்துவ ஆலோசனை மையத்தில் ஆய்வு செய்த பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. பல மாணவர்கள், பெற்றோர் வற்புறுத்தலால், நீட் தேர்வு எழுதியதாகவும், அதனால், தேர்வு மீதான பயமும், வருத்தமும் இருப்பதாக தெரிவித்தனர். அதனால், பெற்றோருக்கும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
18-செப்-202115:54:10 IST Report Abuse
unmaitamil இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் "பாலிடாலுக்கு" தடை வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். பா லிடாலை தடை செய்ய அவசியம் இல்லை. காரணம் பாலிடால் மருந்து குடித்த சில "பாலிடால் பையன்கள் " , இறக்காமல் தேர்தலில் வெற்றிபெற்று MLA,வாக இப்போதைய சட்டசபையில் இருக்கிறார்கள்.
Rate this:
Srinivas.... - Chennai,இந்தியா
18-செப்-202118:43:48 IST Report Abuse
Srinivas....///வெற்றிபெற்று MLA,வாக இப்போதைய சட்டசபையில் இருக்கிறார்கள்.///...
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
18-செப்-202112:25:45 IST Report Abuse
Nakkeeran எலி மருந்து, பூச்சிக்கொல்லி போன்ற மருந்துகளை, பார்வையில் தென்படாதவாறு, கடைகளில், தனி பெட்டகத்தில் வைக்க வேண்டும் ,,,,,,,,,,,, இவை எல்லாம் வீட்டில் அமர்ந்தபடியே 50 சதவிகித தள்ளுபடியில் " ONLINE " ஷாப்பிங்கில் கிடைக்கிறது அதை எவ்வாறு கண்காணிப்பது அமைச்சரே
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
18-செப்-202112:19:45 IST Report Abuse
Nakkeeran பல மாணவர்கள், பெற்றோர் வற்புறுத்தலால், நீட் தேர்வு எழுதியதாகவும், அதனால், தேர்வு மீதான பயமும், வருத்தமும் இருப்பதாக தெரிவித்தனர். இதுதான் உண்மை . நீட் தேர்வு மட்டுமே காரணம் அல்ல என்பதை உணர்ந்தால் சரி. மாணவர்களை ஊக்குவித்து விருப்பத்துடன் தேர்வு எழுத செய்தாலே போதும் பாதி தற்கொலைகள் குறையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X