அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க அரசு தயார்: முதல்வர்

Updated : செப் 19, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை :''புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும், ஊக்குவிக்கவும், தமிழக அரசு எப்போதும் தயாராக உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.'பான்' ஐ.ஐ.டி., எனும் உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாடு, நேற்று துவங்கியது.துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பேசியதாவது:உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்கள், நாட்டின் வளர்ச்சியில்,
புதிய தொழில் முயற்சிகள், ஊக்குவிக்க அரசு தயார்: முதல்வர்

சென்னை :''புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும், ஊக்குவிக்கவும், தமிழக அரசு எப்போதும் தயாராக உள்ளது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

'பான்' ஐ.ஐ.டி., எனும் உலகளாவிய இரண்டு நாள் தொழில்நுட்ப மாநாடு, நேற்று துவங்கியது.துவக்க விழாவில், முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பேசியதாவது:உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்கள், நாட்டின் வளர்ச்சியில், பெருமைப்படத்தக்க வகையில் பங்காற்றி உள்ளன.அதிலும், சென்னை ஐ.ஐ.டி., தமிழக அரசு பல்வேறு முனைகளில் இருந்து எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில், அரசுக்கு உறுதுணையாய் இருந்துள்ளது.


திறன்மிகு பணியாளர்கள்



வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் மையமாக, தமிழகம் உருவாவதற்கான பயணம் துவங்கி உள்ளது. நம் பயணத்தின் இலக்கை அடைய உதவுவதில், பான் ஐ.ஐ.டி., 'நெட்வொர்க்' முக்கிய பங்காற்ற வேண்டும்.பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் கவனம் செலுத்தி, அதன் வழியாக மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என விரும்புகிறோம்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நாட்டில் இரண்டாம் இடம் வகிப்பதுடன், தொழில் வளர்ச்சிமிக்க மாநிலங்களில் ஒன்றாகவும், தமிழகம் உள்ளது.நாட்டின் மொத்த ஐ.டி., என்ற கணினி துறை சார்ந்த ஏற்றுமதிகளில் 10 சதவீதம் தமிழகத்தின் பங்கு. கடலடி கேபிள்கள் தமிழகத்தில் வர உள்ளன.

காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தியில் இருந்து பெறப்படும், பசுமை மின் திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக, மின்மிகை மாநிலமாக, தமிழகம் மாற உள்ளது.பல்வேறு நிறுவனங்களுக்கும், தமிழகம் ஏற்ற இடமாக இருக்கும். தொழில்நுட்ப கல்வி முடித்த பட்டதாரிகள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் தமிழகத்தில் அதிகரித்து வருவதால், திறன்மிகு பணியாளர்களும் எளிதில் கிடைப்பர். இத்தகைய வளமும், வாய்ப்பும், முதலீட்டாளர்களுக்கான சிறந்த மாநிலமாக, தமிழகத்தை தகுதிப்படுத்தி உள்ளது.தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் வழியாக, தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் அதிகமான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்.


எப்போதும் தயார்



சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை, 'எல்காட்' எனும் மின்னணு கழகம் நிறுவி உள்ளது. உலகத் தரத்திலான பொருட்களையும், சேவைகளையும் வழங்குவதற்கான வாய்ப்பை, அங்கு பணிபுரிவோருக்கு ஏற்படுத்தி தருகிறது.தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையம் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த 35 நிறுவனங்களுடன், 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் மதிப்பலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
இதனால், 55 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள், தமிழகத்தில் உருவாகும்.

தொழில் துவங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக, புதிய கொள்கைகளை வகுத்து வருவதோடு, ஒற்றைச் சாளர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. புதிய புதிய முயற்சிகளை முன்னெடுக்கவும், ஊக்குவிக்கவும், தமிழக அரசு எப்போதும் தயாராக உள்ளது. எனவே, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலமாக, வளர்ச்சியை தரும் மாநிலமாக தமிழகம் இருக்கும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
19-செப்-202100:07:47 IST Report Abuse
Mohan நீங்க எல்லாம் சாராயம் விப்பீங்க, மணல் விப்பீங்க, எரி குளத்த கூட விப்பீங்க. ஆனா நாங்கமட்டும் ஊக்கு விக்கனுமா. நல்லாருக்கே உங்க நாயம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-செப்-202123:08:23 IST Report Abuse
RajanRajan மத்திய அரசின் ஊதாரி திட்டம்::: அறிவோம். 100-நாள் ஊரக வேலைத் திட்டம், ( ஊதாரி வேலை திட்டம்.) 2006 ல், மத்திய அரசின் திட்டமாக காங்கிரசின் மண்மோகன் சிங்கால் துவக்கப்பட்டு, 15 ஆண்டுகளில், இந்தியாவின் மாபெரும் ஊதாரித் திட்டமாக உருவெடுத்து நிற்கிறது. இந்த 100-நாள் ஊதாரித் திட்டத்தை 150-நாள் ஊதாரி திட்டமாக மாற்றும் தமிழ் நாடு மாநில அரசின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, அருவெறுக்கத் தக்கதுமாகிறது. கிராமங்களிலும், விவசாயத்திற்கும் இந்திக்காரர்களை குடியேற்றும் திட்டந்தான் 150-நாள் ஊதாரி வேலைத்திட்டம்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
18-செப்-202121:42:09 IST Report Abuse
GANESUN திரு வையாபுரி, உங்க அறிவுரைக்கு நன்றி. ஆனால் நாங்கள் ஏற்கனவே 5+1 டாலர் அறிவுரை கும்பல் இறக்குமதி செய்யப்பட்டு செயல்பாட்டில் உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X