பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்தி உலக சாதனை! பிரதமர் மோடி பிறந்த நாளில் இந்தியா பெருமிதம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 17, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளான நேற்று, ஒரே நாளில் நாடு முழுதும் 2.27 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 71வது பிறந்த நாள். இதை, பா.ஜ.,வினர் நாடு முழுதும் சிறப்பாக
தடுப்பூசி, உலகசாதனை, பிரதமர், மோடி, பிறந்தநாள், இந்தியா, பெருமிதம்

புதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாளான நேற்று, ஒரே நாளில் நாடு முழுதும் 2.27 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.


நம் நாட்டில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க, தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 71வது பிறந்த நாள். இதை, பா.ஜ.,வினர் நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடினர்.பிரதமரின் பிறந்த நாளை மக்களுக்கு சேவை செய்யும் நாளாக கடைப்பிடிக்க பா.ஜ., முடிவு செய்தது. இந்த நாளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில், புதிய சாதனை படைக்க திட்டமிடப்பட்டது.இது தொடர்பான திட்டத்துக்கு, 'சேவா சமர்ப்பண் அபியான்' என பெயரிட்டு, அடுத்த மாதம் 7 வரை தடுப்பூசி பணிகளை தீவிரமாக செயல்படுத்த பா.ஜ.,வினர் திட்டமிட்டு உள்ளனர்.

பிரதமரின் பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சுகாதாரத் துறை நேற்று ஒரே நாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து, நாடு முழுதும் நேற்று தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகரங்களில், சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பூசி போடும் பணி நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. முகாம்களுக்கு மக்களை அழைத்து வந்து, தடுப்பூசி போட்டுக் கொள்ள வைக்கும் பணியில் பா.ஜ.,வினர் மும்முரமாக ஈடுபட்டனர்.

இதனால், ஆறு மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. மதியம் 1:30 மணியளவில் நாடு முழுதும் ஒரு கோடியே 71 ஆயிரத்து 776 டோஸ் தொடர்ச்சி 15ம் பக்கம்சாதனை3ம் பக்கத் தொடர்ச்சிபோடப்பட்டு இருந்தது.இந்த எண்ணிக்கை மாலை 6:00 மணிக்கு 2.15 கோடியை எட்டியது. இதன் வாயிலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டதில் இந்தியா சாதனை படைத்தது.



கடந்த ஒரு மாதத்தில் நான்காவது முறையாக, ஒரே நாளில் ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது. ஆக., 27, 31, செப்., 6 ஆகிய நாட்களில் ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

சீனாவில் கடந்த ஜூனில் ஒரே நாளில் 2.47 கோடி டோஸ் செலுத்தி உலக சாதனை செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் நேற்று ஒரே நாளில், இரவு, 10:15 மணி நிலவரப்படி 2.26 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இதுவரை போடப்பட்ட டோஸ்களின் மொத்த எண்ணிக்கை 79 கோடியை கடந்துள்ளது.




வாக்காளர்களுக்கு முக்கியத்துவம்


அக்டோபர் 2ம் வாரத்தில் 100 கோடிஉத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.


latest tamil news




கொரோனா மூன்றாவது அலை பரவும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தல் நடக்க உள்ளது.இதையடுத்து, இந்த மாநிலங்களில் வாக்காளர்கள் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி மத்திய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டில் 100 கோடி டோஸ் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை, அக்., இரண்டாவது வாரத்துக்குள் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.சட்டசபை தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களிலும், வாக்காளர்கள் அனைவருக்கும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்படுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.



குழந்தைகளுக்கு தடுப்பூசி தயார்!



குஜராத் மாநிலம் ஆமதாபாதைச் சேர்ந்த, 'சைடஸ் கடிலா' நிறுவனத்தின் 'சைகோவ் - டி' தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 12 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கு இந்த தடுப்பூசி போடப்பட உள்ளது.சுகாதார ஊழியர்களுடன் பேச்சுகோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக கோவா சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டோரிடம் இன்று கலந்துரையாடுகிறார்.




அதிகரிக்கும் வேகம்



நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜன., 16ல் துவங்கியது. முதலில் சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் 1 முதல், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியது. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நாட்டில் முதல் 85 நாளில் 10 கோடி டோஸ் போடப்பட்ட நிலையில், அடுத்த 45 நாட்களில் 20 கோடி டோஸ், அதற்கடுத்த 29 நாளில் 30 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன. இதன் பின், 24 நாட்களில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 40 கோடியை தொட்ட நிலையில், ஆக., 6ம் தேதி 50 கோடியை தொட்டது. இதைத் தொடர்ந்து 19 நாட்களில் 60 கோடியையும், 13 நாட்களில் 70 கோடியையும் எட்டிய தடுப்பூசி பணி, கடந்த 13ம் தேதி 75 கோடியை கடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
18-செப்-202121:35:45 IST Report Abuse
J.Isaac கொரனா லாக் டவுன் காலத்தில், வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று அபராதத்தொகை ,ஏழை நடுத்தர மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து பிடித்தம் செய்தது (கிட்டத்தட்ட 4998கோடி)அடுத்து பெரிய சாதனை..
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
18-செப்-202121:16:42 IST Report Abuse
Nagercoil Suresh சுகாதாரத்துறையின் முயற்சி பாராட்டுக்குரியது...
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
18-செப்-202115:22:12 IST Report Abuse
unmaitamil இதுதான் நேர்மையான தன்னலமற்ற தலைவனின் பனி . தனக்கு பிறந்தநாள் விழா எடுத்து, அன்று ஆள் உயர மாலையிட்டு, கட்டவுட்க்கு பால் ஊத்தி, மானாட மயிலாட கண்டு, நடிகர்களை கூட்டி வதைத்து விழா எடுக்கும் திராவிஷ கூட்டம், இனியாவது இப்படி நல்ல காரியங்கள் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X