பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

Added : செப் 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி, 69, இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.நாகாலாந்து மாநில கவர்னராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான, மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய போது, ஜம்மு -
 தமிழகம் , 25வது கவர்னராக  ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

சென்னை :தமிழகத்தின் 25வது கவர்னராக ஆர்.என்.ரவி, 69, இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாகாலாந்து மாநில கவர்னராக இருந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான, மத்திய உளவுத் துறையில் பணியாற்றிய போது, ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதிகளில், வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றினார்.தெற்காசியாவில் மனித குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றவர். நாட்டின் எல்லைகளில் உள்ள மக்களின் சமூக அரசியலில் பெரும் பங்காற்றினார்.


latest tamil newsஇனக்கலவரம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பிரச்னைகளை தீர்ப்பதில் முக்கிய பங்காற்றினார். பல பயங்கரவாத குழுக்கள் அமைதி நிலைக்கு திரும்ப வழிவகுத்தார்.
கடந்த 2012ல் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் பிரதமர் அலுவலகத்தில், இணை புலனாய்வு குழு தலைவராக செயல்பட்டார்.

கடந்த, 2014 ஆக., 29ல், நாகா அமைதி பேச்சுக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின், 2018 அக்டோபரில், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அடுத்து, 2019 ஆக.,1ல் நாகாலாந்து கவர்னரானார். தற்போது, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 10:30 மணிக்கு, கவர்னர் மாளிகையில் நடக்கும் விழாவில், தமிழக கவர்னராக பதவியேற்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.விழாவில், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-செப்-202110:34:39 IST Report Abuse
பேசும் தமிழன் பழக்க தோசத்தில்... பயந்து போய் ஊளையிடுகிறார்.... ஏனெனில் அவர்கள் கொள்கையே கொள்ளை அடிப்பது தான்.... எங்கெல்லாம் வாய்ப்பு கிடைகிறதோ... அங்கெல்லாம் ஆட்டையை போடுவதே அவர்கள் வழக்கம்
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
18-செப்-202108:38:18 IST Report Abuse
Vittalanand என்ன திறமை இருந்தாலும் ஆட்டுக்கு தாடி தானே
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
18-செப்-202108:27:58 IST Report Abuse
elakkumanan அய்யா, நீங்களாவது டுமீல் பட்டியை காப்பாத்துவீங்களா? உண்மை, நேர்மை, வளர்ச்சி , போட்டி, மக்கள் நலன் , தேச நலன் போன்ற வார்த்தைகள் பொய், திராவிடம், கடன் தள்ளுபடி, இட ஒதுக்கீடு, இலவசம், மொழி வளர்ச்சி என்ற வார்த்தைகளை கொண்டு பொய்யாக நிரப்பி, டாஸ்மாக் டுமீல் பட்டி கும்பலை ஏமாற்றுகிறார்கள்.. வளர்ச்சி இருந்தால், கடன் தள்ளுபடி தேவை இல்லை.. அறிவு இருந்தால், போட்டி தேர்வும் இட ஒதுக்கீடும் தேவையே இல்லை.. மக்கள் நலமாக வாழ வகை செய்தால், இலவசம் தேவையே இல்லை. தேச நலன் என்பது ஒரு மொழியின் வளர்ச்சியால் மடத்தனமாக அளவிடப்படுகிறது.. தனி தமிழ்நாடு கேட்டால் தலைவனாக ஆகலாம்...கொங்கு மாநிலம் கேட்டால், பிரிவினை வாதமாம்... பிள்ளையார் சிலைக்கு மாலை அணிவித்தால், மூட நம்பிக்கை... தெருவில் இருக்கும் சிலைக்கு மாலை அணிவித்தது விழுந்து கும்பிட்டால் மரியாதையும்... பகுத்தறிவாம்....இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் விலைபோன ஊடக கோஷ்டி ...டுமீல் பட்டியில் குறையில்லாமல் மதமாற்றமும், பிரிவினைவாத பிரச்சாரமும் நடக்கிறது.. .வெளிநாட்டு காசுக்கு, டுமீல் பட்டி நாக்குகள் பல மடங்கு நீள்கிறது.. கவனிப்பீர்களா அய்யா? நம்பிக்கையுடன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X