மோடிக்கு மாற்று ராகுல் அல்ல; திரிணமுல் காங்., - எம்.பி., சூசகம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோல்கட்டா-“அடுத்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கு மாற்றாக ராகுல் இருக்க வாய்ப்பில்லை,” என, திரிணமுல் காங்., - எம்.பி., சுதீப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தி, மத்தியில் ஆட்சி அமைப்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் இணைக்கும் முயற்சிகளில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்.,

கோல்கட்டா-“அடுத்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கு மாற்றாக ராகுல் இருக்க வாய்ப்பில்லை,” என, திரிணமுல் காங்., - எம்.பி., சுதீப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.



latest tamil news


அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தி, மத்தியில் ஆட்சி அமைப்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் இணைக்கும் முயற்சிகளில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் திரிணமுல் காங்., கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சுதீப் பந்தோபாத்யாய் பேசியதாவது:காங்., கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என நாங்கள் கூறவில்லை. நீண்ட காலமாக நான் ராகுலை கண்காணித்து வருகிறேன். அவர் தன்னை ஒரு தலைவராக வளர்த்து கொள்ளவில்லை. மோடிக்கு மாற்றாக அவர் உருவெடுக்கவில்லை.இந்த ஒட்டுமொத்த நாடும் மம்தாவை தான் மோடிக்கு மாற்று சக்தியாக கருதுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


காங்., தலைவர் சோனியா மீது மரியாதை வைத்துள்ள திரிணமுல் காங்., தலைவர்கள், ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்க தயங்குவது வெளிப்படையாகவே தெரிவதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
18-செப்-202112:03:46 IST Report Abuse
Duruvesan மோடிக்கு மாற்று எங்கள் தமிழ் தந்தை வருங்கால ஜனாதிபதி ஸ்டாலின் மற்றுமே, தமிழ் ஹிந்துக்கள் 2024 ல 40 சீட் கொடுப்பார்கள், ராவுலு சும்மா கண்டி காஷ்மீர் போயி கோயிலுக்கு போனதுனால வயநாடு குல்லா பாய்ஸ் கோவமா இருக்காங்க அங்க வூதிக்குமாம்,கீசோறு சொல்லிகீறாரு பிஜேபி 20-30 சீட் வாங்குமாம்,mamata 20 சீட் குடுக்கும், காங்கிரஸ் அடுத்து athiga சீட் குடுக்க போறது சோழ பரம்பரை சிங்கம் ஸ்டாலின் மட்டுமே, ஆக ஸ்டாலின் ஜனாதிபதி, உடையா சார் பிரதமர், இன்பா அன்னா முதல்வர் ஆவது உருது,
Rate this:
Cancel
Nakkeeran - Hosur,இந்தியா
18-செப்-202111:59:41 IST Report Abuse
Nakkeeran ஆக பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மம்தா அம்மையாருக்காக பிரச்சாரம் செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
18-செப்-202111:29:52 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இனிமேல்தான் பிறக்கணும் ..நம் நாட்டில் தேசபக்தி உள்ளவர்கள் தான் அதிக சதவிகிடம் ஆகயால் மீண்டும் மோடிஜிதான் வருவார் பிரிவினை சக்திகள் மன்னை கவ்வுவர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X