மோடிக்கு மாற்று ராகுல் அல்ல; திரிணமுல் காங்., - எம்.பி., சூசகம்| Dinamalar

மோடிக்கு மாற்று ராகுல் அல்ல; திரிணமுல் காங்., - எம்.பி., சூசகம்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (15)
Share
கோல்கட்டா-“அடுத்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கு மாற்றாக ராகுல் இருக்க வாய்ப்பில்லை,” என, திரிணமுல் காங்., - எம்.பி., சுதீப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தி, மத்தியில் ஆட்சி அமைப்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் இணைக்கும் முயற்சிகளில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்.,

கோல்கட்டா-“அடுத்த லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடிக்கு மாற்றாக ராகுல் இருக்க வாய்ப்பில்லை,” என, திரிணமுல் காங்., - எம்.பி., சுதீப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.



latest tamil news


அடுத்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்தி, மத்தியில் ஆட்சி அமைப்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் இணைக்கும் முயற்சிகளில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் திரிணமுல் காங்., கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான சுதீப் பந்தோபாத்யாய் பேசியதாவது:காங்., கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது என நாங்கள் கூறவில்லை. நீண்ட காலமாக நான் ராகுலை கண்காணித்து வருகிறேன். அவர் தன்னை ஒரு தலைவராக வளர்த்து கொள்ளவில்லை. மோடிக்கு மாற்றாக அவர் உருவெடுக்கவில்லை.இந்த ஒட்டுமொத்த நாடும் மம்தாவை தான் மோடிக்கு மாற்று சக்தியாக கருதுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


காங்., தலைவர் சோனியா மீது மரியாதை வைத்துள்ள திரிணமுல் காங்., தலைவர்கள், ராகுலுக்கு முக்கியத்துவம் அளிக்க தயங்குவது வெளிப்படையாகவே தெரிவதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X