ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகள் நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட எட்டு உயர் நீதிமன்றங்களில் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க எட்டு பேரையும், ஐந்து தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நேற்று

புதுடில்லி-கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட எட்டு உயர் நீதிமன்றங்களில் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க எட்டு பேரையும், ஐந்து தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.



latest tamil news


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நேற்று முன்தினம் கூடியது. இரண்டு நாட்கள் நடந்த இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி நியமனம் மற்றும் நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


latest tamil news


இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிந்தால், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா - கோல்கட்டா, பிரசாந்த் குமார் மிஸ்ரா - ஆந்திரா, ரிதுராஜ் அஸ்வதி - கர்நாடகா, சதீஷ் சந்திர ஷர்மா - தெலுங்கானா, ரஞ்சித் வி மூர் - மேகாலயா. அரவிந்த் குமார் - குஜராத், ஆ.வி.மலிமத் - மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஐந்து தலைமை நீதிபதிகள், 28 நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என நம்புவதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
18-செப்-202108:45:50 IST Report Abuse
GMM உச்ச நீதிபதிகள் குழு புதிய நீதிபதிகள் நியமன பரிந்துரையை அப்படியே ஏற்க பரிந்துரைக்கு guide line வகுக்க வேண்டும். நீதிபதிகள் தேர்வு முறை அவசியம். NEET, JEE போன்ற தேர்வுகள் உண்டு. அரசினால் குறுக்கிட முடியவில்லை. நீதிமன்ற அதிகாரத்தில் அரசு தலையிட முடியாது. நீதிபதிகளை நீதிபதி தேர்வு செய்யும் முறையை நீக்குங்கள். வழக்கறிஞர்கள் மனுவை அரசு தணிக்கை செய்ய வேண்டும். மொட்டை பெட்டிஷன் போல் பல மனுக்கள் உள்ளன. நிர்வாக விதிகளுக்கு பொருத்துவது இல்லை. மக்கள் நேரிடையாக மனு தாக்கல் செய்ய அனுமதி வேண்டும். வழக்கு நீண்ட காலம் நடை பெறும். இட பெயர்வு இருக்கும். குடியிருக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றம் வழியாக பதில் பெற மனு தாக்கல் செய்ய அனுமதி வேண்டும். அரசு நீதிமன்ற நிர்வாகம் சீர் செய்ய முன்வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X