ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகள் நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை| Dinamalar

ஐகோர்ட்டுகளுக்கு புதிய நீதிபதிகள் நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி-கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட எட்டு உயர் நீதிமன்றங்களில் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க எட்டு பேரையும், ஐந்து தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நேற்று

புதுடில்லி-கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட எட்டு உயர் நீதிமன்றங்களில் புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க எட்டு பேரையும், ஐந்து தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற 'கொலீஜியம்' மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.



latest tamil news


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில், நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் நேற்று முன்தினம் கூடியது. இரண்டு நாட்கள் நடந்த இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி நியமனம் மற்றும் நீதிபதிகளை இடமாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


latest tamil news


இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:கோல்கட்டா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிந்தால், அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா - கோல்கட்டா, பிரசாந்த் குமார் மிஸ்ரா - ஆந்திரா, ரிதுராஜ் அஸ்வதி - கர்நாடகா, சதீஷ் சந்திர ஷர்மா - தெலுங்கானா, ரஞ்சித் வி மூர் - மேகாலயா. அரவிந்த் குமார் - குஜராத், ஆ.வி.மலிமத் - மத்திய பிரதேச உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.மேலும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் ஐந்து தலைமை நீதிபதிகள், 28 நீதிபதிகளை இடமாற்றம் செய்யவும் கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.

இந்த பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என நம்புவதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X