பூமிக்கு பத்திரமாக திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

Updated : செப் 18, 2021 | Added : செப் 18, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
பீஜிங்-மூன்று மாதங்களுக்கு முன் விண்வெளி பயணம் மேற்கொண்ட மூன்று சீன வீரர்கள், நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.அமெரிக்கா, ரஷ்யாவை போலவே சீனாவும் தங்கள் நாட்டுக்கென பிரத்யேக விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.இந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க தேவையானவற்றை எடுத்துச் சென்று அதை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைக்கும் பணியில் சீனா

பீஜிங்-மூன்று மாதங்களுக்கு முன் விண்வெளி பயணம் மேற்கொண்ட மூன்று சீன வீரர்கள், நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.



latest tamil news


அமெரிக்கா, ரஷ்யாவை போலவே சீனாவும் தங்கள் நாட்டுக்கென பிரத்யேக விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.இந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க தேவையானவற்றை எடுத்துச் சென்று அதை கொஞ்சம் கொஞ்சமாக கட்டமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சீன விண்வெளி வீரர்கள் மூன்று பேர், ஜூனில் விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். மூன்று மாதங்கள் அங்கு தங்கி இருந்து விண்வெளி நிலையப் பணிகளை செய்து முடித்தனர்.விண்வெளி நிலையத்தில் இருந்து சீன அதிபர் ஷீ ஜிங்பிங் உடன் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உரையாடினர்.சீன வரலாற்றிலேயே அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி பணியாற்றியவர்கள் என்ற பெருமையை இந்த மூன்று வீரர்கள் பெறுகின்றனர்.


latest tamil news


பணிகள் முடிவடைந்த நிலையில் மூன்று வீரர்களும் விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மங்கோலியப் பகுதியில் மூன்று வீரர்களும் தரை இறங்கினர்.'சீன விண்வெளி நிலையம் அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
22-செப்-202120:29:03 IST Report Abuse
Easwar Kamal அமரிக்கா விண்வெளி சென்றால் அந்த குழுவில் எல்லா நாட்டினவரும் இருப்பார்கள். கல்பனா சாவ்லா இதில் அடங்குவர். சீனாக்காரன் குழுவிவில் வேறு எந்த நாட்டினரும் இருக்க மாட்டார்கள் அதுதான் வித்தியாசம்.
Rate this:
Cancel
canchi ravi - Hyderabad,இந்தியா
18-செப்-202112:24:10 IST Report Abuse
canchi ravi அமெரிக்க ரஷ்யாவ்வுக்கு போட்டி. வாழ்க.
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
18-செப்-202111:03:16 IST Report Abuse
Believe in one and only God சத்தம் இல்லாமல் சாதித்து காட்டுகிறான் சீனாக்காரன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X